நன்கொடை வழங்கியதில் ஷிவ் நாடார் முதலிடம்
1 min read
Shiv Nadar tops the donation list
3.11.2023
இந்தியாவில் நன்கொடை வழங்கியதில் ஷிவ் நாடார் 2வது
ஆண்டாக முதலிடம் பெற்று வருகிறார்.
ஷிவ்நாடார்
உலக பணக்காரர்கள் பட்டியல் மற்றும் இந்திய நன்கொடையாளர் பட்டியல் போன்றவற்றை எடெல்கிவ் ஹுருன் இந்தியா அமைப்பு வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில், எச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஆண்டுக்கு ரூ. 2,042 கோடி நன்கொடைகள் வழங்கி முன்னணி இந்திய நன்கொடையாளராக தொடர்ந்து 2-வது ஆண்டாக முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார் என்று ஹுருன் அமைப்பு தெரிவித்துள்ளது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூ.5.6 கோடி வரை நன்கொடை அளித்துள்ளார். 78 வயதான அவர் 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளார். இதில் பெரும்பாலான தொகை கல்விக்காக வழங்கப்பட்டுள்ளது.
2-வது இடத்தில் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கல்வி தொடர்பான காரணங்களுக்காக ரூ.1,774 கோடி நன்கொடை அளித்துள்ளார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தலைவர் முகேஷ் அம்பானி ரூ.376 கோடி நன்கொடை அளித்து 3வது இடத்தில் உள்ளார்.
ஆதித்ய பிர்லா குழுமத்தின் குமார் மங்கலம் பிர்லா ரூ.287 கோடி நன்கொடை அளித்து 4-வது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி 2022-ம் ஆண்டிலிருந்து கல்விக்காக ரூ.285 கோடி நன்கொடை அளித்து தரவரிசையில் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.