கடையம் நூலகருக்கு 2 வருது; அமைச்சர் வழங்கினார்
1 min read2 years for store librarian; Minister presented
20.11.2023
கடையம் நூலகருக்கு 2 விருதுகள் கிடைத்தது. அந்த விருதுகளை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.
நூலகர் மீனாட்சி சுந்தரம்
ஒவ்வொருவருடமும் நவம்பர் மாதம் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தேசிய நூலக வாரவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின்போது சிறந்த நூலகர், சிறந்த நூலகங்களுக்கு நூலக தந்தை எஸ்.ஆர். அரங்கநாதனின் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு தமிழக நூலகத் துறையின் சார்பில்தேசிய நூலக வார விழா சீர்காழியில் நடந்தது. இதில் மாவட்ட வாரியாக சிறந்த நூலகர், மற்றும் சிறந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்பட்டது. விழாவுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
இதில் தென்காசி மாவட்டம் கடையம் நூலகர் மீனாட்சி சுந்தரத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்தன. திருநெல்வேலி, தென்காசி ஒருங்கிணைந்த மாவட்டத்திற்கான சிறந் நூலகராக இவர் தேர்ந்து எடுக்கப்பட்டார். அதாவது நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இவர் ஒருவருக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் நல்நூலகர் மற்றும் மாநில, அளவில் அதிக நன்கொடை பெற்றததற்காக இந்த இரண்டு விருதுகளையும் மீனாட்சி சுந்தரம் பெற்றார்.
இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் கிளை நூலகம் சிறந்த நூலகமாக தேர்வு செய்யப்பட்டு எஸ்.ஆர் அரங்கநாதன் விருதி நூலகர் மாதவன் பெற்றார்.
விருது பெற்ற நூலகரை நூலகத்துறை இயக்குனர் இளம் பகவத்,தூத்துக்குடி மாவட்ட நூலக அலுவலர் ரங்கநாயகி,திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம்,தூத்துக்குடி மாவட்ட மைய நூலகர் ராம்சங்கர், நூலக வாசகர் வட்ட நிர்வாகிகள் உட்பட பலர்பாராட்டினர்.