ராணிப்பேட்டையில் ஆர்.எஸ்.எஸ். பேரணி
1 min read
RSS in Ranipet. Rally
20.11.2023
ராணிப்பேட்டையில் சமுதாய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் தன்னார்வ தொண்டர்கள் வெள்ளை காக்கி உடை அணிந்து அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டனர்*
ஆர்.எஸ்.எஸ். பேரணி
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் விஜயதசமி ஆர் எஸ் எஸ் 98 வது ஆண்டு விழா வள்ளலாரின் 200 வது ஆண்டு நிறைவு மற்றும் மகாவீரரின் 2550 ஆண்டு விழாவை முன்னிட்டு சமுதாய நல்லிணக்க வலியுறுத்தும் வகையில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் சார்பில் ஆர்எஸ்எஸ் -ன் அணிவகுப்பு ஊர்வலம் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது..
ஊர்வலத்தில் முன்னதாக ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக தன்னார்வ தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆர்எஸ்எஸ் பிரார்த்தனையில் ஈடுபட்டு பெண்கள் ஆர்எஸ்எஸ் கொடிக்கு பூ மலர்களை தூவி தீபாரதனை காண்பித்த பின்னர் அணிவகுப்பு ஊர்வலம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் தொடங்கி ராணிப்பேட்டை பழைய பேருந்து நிலையம் சந்தைமேடு நவல்பூர் கிருஷ்ணகிரி சாலை உள்ளிட்ட பல்வேறு வீதியின் வழியாக சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் காக்கி வெண்மை ஆடையை அணிந்த தன்னார்வ தொண்டர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டு அமைதியான முறையில் பேரணியாக சென்றனர்..
இந்த ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வல பேரணி நிகழ்வில் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர் கிரண் ஸ்ருதி தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
-செய்தியாளர் ஆர் ஜே.சுரேஷ்குமார்..