சுரங்க விபத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு எய்ம்ஸில் மருத்துவ பரிசோதனை
1 min read
Medical examination at AIIMS for workers rescued from mining accidents
29.11.2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா மலைப்பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்க 17 நாளாக நடந்த மீட்புப் பணி நேற்று முடிவடைந்தது.
ஒவ்வொரு தொழிலாளராக பத்திரமாக மீட்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களது உறவினர்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
தற்காலிக மருத்துவ முகாமில் 41 தொழிலாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், எய்ம்ஸில் அடுத்தகட்ட மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதையடுத்து தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்காக இந்திய விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர் மூலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.