கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை 4 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு
1 min read
The baby elephant fell into the well and was rescued after a 4-hour struggle
29.5.2024
நீலகிரி மாவட்டம் கொளப்பள்ளியில் கிணற்றுக்குள் விழுந்த குட்டி யானை 4 மணி நேரம் போராடி மீட்டனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் குறிஞ்சி நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் யானை கூட்டத்திலிருந்த குட்டி யானை ஒன்று தவறி கிணற்றுக்குள் விழுந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் இன்று காலை 8 மணி அளவில் சம்பவ இடத்தை பார்வையிட்டு கிணற்றுக்குள் இருந்த குட்டி யானையை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
10 மணி நேரத்துக்கும் மேலாக இரு பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் குட்டி யானையை மீட்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. கிணற்றைச் சுற்றி இருந்த மண்ணை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. இதனை தொடர்ந்து கிணற்றுக்குள் இருந்த யானை குட்டி மெதுவாக கிணற்று பகுதியில் இருந்து மண் தோண்டப்பட்ட பகுதிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் அந்த குட்டி யானை , தாய் யானையுடன் சேர்க்கப்பட்டது.