மீட்பு பணியில் ஈடுபட்ட போலீஸ் ஏட்டு வெள்ளத்தில் சிக்கி சாவு
1 min read
Eight policemen engaged in rescue work got caught in the flood and died
25.12.2023
வெள்ள மீட்புப் பணி முடிந்து வீடு திரும்பிய போலீஸ் ஏட்டு வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
போலீஸ்
வங்கக்கடலில் உருவான மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து 12 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் சென்னை முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. புறநகர் மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகியவையும் மிதக்க தொடங்கின. பேருந்து போக்குவரத்து முதல் விமானப் போக்குவரத்து வரை அனைத்தும் பாதிக்கப்பட்டன.
பல்வேறு சாலைகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டன. குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மின்மோட்டார்கள் மூலம் மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மின் விநியோகமும் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவிட்டு, பணி முடிந்து வீடு திரும்பும் போது கொளத்தூர் கே7 தலைமை காவலர் (ஏட்டு) ருக்மேநாதன் என்பவர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார். அவரின் உடல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. சென்னையில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட தலைமை காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.