October 4, 2024

Seithi Saral

Tamil News Channel

சங்கரன்கோவில் அருகே கிராபைட் தொழிற்சாலைக்கு ம.தி.மு.க. எதிர்ப்பு

1 min read

MDMK to Graphite Factory near Sankarankoil Resistance

5.12.2023
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சான் குளம் பகுதியில் 600 ஏக்கர் விவசாய நிலங்களை கைப்பற்றி அதில் கிராபைட் தொழிற்சாலை கொண்டுவர ஒன்றிய அரசு மறைமுகமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மதிமுக முதன்மைச் செயலாளர் துரைவைகோ பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள
தென்காசி வருகை தந்தார் அப்போது தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அலுவலகத்தில் வைத்து பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் கூறியதாவது:-

ஒன்றிய அரசு கடந்த வாரம் தமிழகத்தில் ஏழு இடங்களில் கனிம வளங்கள் எடுப்பதற்காக பத்திரிகைகளில் மின் ஏலம் விடுவதற்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குருஞ்சான்குளம் கிராமத்தில் அமைக்கப்பட உள்ள கிராபைட் தொழிற்சாலைக்கு 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள தாகவும் அங்கு கிராபைட் சுரங்கம் தோண்ட உள்ளதாக வும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த கிராபைட் தொழிற்சாலை அமைப்பது குறித்து ஒன்றிய அரசு தமிழக அரசுக்கோ அல்லது தென்காசி மாவட்ட நிர்வாக துக்கோ எந்தவித தகவலும் அளிக்கவில்லை. மேலும் இது குறித்து அப்பகுதி பொது மக்களின் கருத்துக்களையும் கேட்டு அறியவில்லை. எனவே இந்த தொழிற்சலை இங்கு அமைப்பதன் மூலமாக மீண்டும் போபாலில் நடந்தது போல் மாபெரும் உயிரிழப்பு சம்பவம் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே உடனடியாக மக்களை பாதிக்கும் இந்த திட்டத்தை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்

மேலும் குறிஞ்சான்குளம் பகுதி சிறப்பாக வேளாண்மை தொழில் செய்யும் பகுதியாக திகழ்கிறது. இதில் 600 ஏக்கர் நிலத்தை ஒன்றிய அரசு கையகப்படுத்தும் பட்சத்தில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும். மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் தீவிர எதிர்ப்பு காரணமாக தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் அமைய இருந்த நியூட்சிதோ ஆய்வு திட்டமும் கைவிடப் பட்டுள்ளது அது போல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இத்திட்டத்தை செயல்படுத்த விடாமல் தடுக்கும் வகையில் அனைத்து விவசாயிகள் மற்றும் பொது மக்களை திரட்டி மதிமுக சார்பில் தொடர் போராட்டங்கள்
நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்

இந்த நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.சதன் திருமலைக்குமார், மதிமுக துணை பொதுச்செயலாளர் வழக்கறிஞர் திருமலாபுரம் தி.மு.இராசேந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளர் இராம. உதயசூரியன், தென்காசி வடக்கு மாவட்ட மதிமுக செயலாளர் சுதா பாலசுப்பிரமணியன், வடக்கு மாவட்ட மதிமுக அவைத்தலைவர் இடைகால் செல்வசக்தி வடிவேல், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக அவைத் தலைவர் தென்காசி என். வெங்கடேஸ்வரன், மதிமுக தலைமை தணிக்கை குழு உறுப்பினர் சுரண்டை சு.ராமகிருஷ்ணன், மதிமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாநில பொறியாளர் அணி செயலாளருமான எஸ்.ஆர். எம்.வேதநாயகம், மதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் , சுரண்டை ஏ.டி. நடராசன்,இலத்தூர் சு‌.முருகன்,குற்றாலம் ரெங்கசாமி, தென்காசி தெற்கு மாவட்ட பொருளாளர் நோட்டரி வழக்கறிஞர் அ.சுப்பையா,தெற்கு மாவட்ட மதிமுக துணைச் செயலாளர்கள் ஆலங்குளம் மருதசாமி பாண்டியன், சுரண்டை எஸ்.கே.டி. துரைமுருகன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் பொன் ஆனந்தராஜ், தென்காசி கிழக்கு ஒன்றிய மதிமுக செயலாளர் குத்துக்கல்வலசை சு.மாரிச்செல்வம், தென்காசி மேற்கு ஒன்றிய மதிமுக செயலாளர் வல்லம் செ.சுப்பிரமணியன்
கீழப்பாவூர் ஒன்றிய மதிமுக செயலாளர் இராஜபாண்டி பே.ஆறுமுகச்சாமி,
தென்காசி நகர செயலாளர் ஜி.கார்த்திக்,செங்கோட்டை நகர மதிமுக செயலாளர் இ.அய்யப்பன் மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக மதிமுக சார்பில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம், வீரகேரளம்புதூர், சுரண்டை, இலத்தூர் விலக்கு, உள்ளிட்ட பகுதிகளில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமான மதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.