புயல் பாதிப்பு:தமிழ்நாட்டிற்கு ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு
1 min read
Cyclone damage: The central government has allocated Rs. 450 crores for Tamil Nadu
7/12/2023
வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ. 5,060 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னையில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. தற்போது மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனால், சென்னையில் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் வடிந்துள்ளது. எனினும், புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
இதற்கிடையே, வெள்ள பாதிப்பு நிவாரணமாக 5,060 கோடி ரூபாயை முதல் கட்டமாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியிருந்தது. இந்த நிலையில், புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாட்டிற்கு முதல் கட்டமாக ரூ.450 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.450 கோடியை முன்கூட்டியே ஒதுக்கீடு செய்து இருப்பதாக அமித்ஷா கூறியுள்ளார்.