தென்காசி திருமலாபுரம் உள்பட தமிழகத்தில் 4 இடங்களில் அகழாய்வு நடத்த முடிவு
1 min read
Excavation at 4 new locations in Tamil Nadu including Tenkasi Tirumalapuram
16.12.2023
தென்காசி மாவட்டம் திருமலாபுரம் உள்பட தமிழகத்தில் புதிதாக 4 இடங்களில் அடுத்த ஆண்டு, புதிதாக நான்கு இடங்களில் அகழாய்வு செய்ய, தமிழக தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், இந்த ஆண்டு பட்டறைப்பெரும்புதுார், கீழ்நமண்டி, பூதிநக்தம், கங்கைகொண்ட சோழபுரம், பொற்பனைக்கோட்டை, கீழடி, கொந்தகை, வெம்பக்கோட்டை, துலுக்கர்பட்டி ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. இவற்றின் முதல்நிலை அறிக்கை தயாரிக்கும் பணி தற்போது நடக்கிறது.
அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிதாக நான்கு இடங்களில் அகழாய்வுப் பணிகளை துவக்க மத்திய தொல்லியல் துறையிடம், தமிழக தொல்லியல் துறை அனுமதி கோரி உள்ளது. மத்திய தொல்லியல் ஆலோசனை வாரியமான ‘காபா’ அமைப்பு, ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின், இதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அனுமதி கிடைத்தால், தென்காசி மாவட்டம் திருமலாபுரம், திருப்பூர் மாவட்டம் கொண்டல் நகர், கடலுார் மாவட்டம் மருங்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் சின்னானுார் ஆகிய இடங்களில் அகழாய்வுப் பணி தொடங்கும்.