June 5, 2026

Seithi Saral

Tamil News Channel

பாராளுமன்றத்துக்குள் தீக்குளிப்பு நாடகம் நடதத முயற்சியா? -பரபரப்பு வாக்குமூலம்

1 min read

An attempt to stage an arson drama inside Parliament? – Exciting Confession

16.12.2023
பாராளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்து புகையை பரவவிட்ட சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளி லலித் ஜா, ‛‛ லோக்சபாவிற்குள் தீக்குளிக்க திட்டமிட்டதாக” போலீசிடம் பகீர் வாக்குமூலம் அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், லலித் ஜா அப்பாவி என அவரது பெற்றோர் கூறியுள்ளனர்.

பாராளுமன்றம் மக்களவையில் கடந்த 13-ந் தேதி பார்வையாளர் மாடத்தில் இருந்து எம்.பி.,க்கள் அமரும் இருக்கையில் குதித்தும், குழல் வாயிலாக வண்ணபுகையை பரவ விட்டு அத்துமீறலில் ஈடுபட்ட இருவர் கைதாகினர். வெளியேயும் அத்துமீறலில் ஈடுபட்ட இருவர் மற்றும் முக்கிய குற்றவாளி லலிதா ஜா, இவர்களுக்கு உதவியவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையின் போது லலித் ஜா, போலீசிடம் வாக்குமூலம் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
நானும், எனது கூட்டாளிகளு0ம் பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் தீக்குளிக்க திட்டமிட்டோம். தீத்தடுப்பு மருந்து தடவினால், அதிக காயம் ஏற்படாது. ஆனால், அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் இருந்ததால் அந்த திட்டத்தை நாங்கள் கைவிட்டோம். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரின் மொபைல் போன்களை அழித்துவிட்டேன்.
இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.

விசாரணையை திசைதிருப்ப லலித் ஜா, வாக்குமூலத்தை மாற்றி மாறி கூறி வருவதாக போலீசார் சந்தேகம் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில், லலித் ஜாவின் தந்தை தேவானந்த் ஜா கூறுகையில், “சம்பவம் குறித்து நேற்று தான் எங்களுக்கு தெரிந்தது. அத்துமீறலில் எனது மகன் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. அவர் பொறுப்பான குடிமகன். பட்டப்படிப்பை முடித்த அவர், கல்லூரியில் பல சான்றிதழ்களை பெற்றுள்ளார். எனது மகன் குற்றவாளி அல்ல. அருகில் உள்ளவர்களிடம் கேட்டுப்பாருங்கள் இத்தகைய சம்பவத்தில் ஈடுபடும் நபர் அல்ல. நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம்.” என்றார்.

இதே கருத்தைத்தான் அவரது தாயரும் கூறினார். ‛‛ எனது மகன் நல்லவர். என்ன நடந்தது என்றே புரியவில்லை. இந்த விவகாரம் குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை ” என்றனர்.
இருவரும் இணைந்து, ‛ எங்களது மகன் அப்பாவி’ என தெரிவித்துள்ளனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *