June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

தென்காசி-அம்பை சாலையை சரிசெய்ய தென்பொதிகை வியாபாரிகள் நல சங்கம் கோரிக்கை

1 min read

Tenkasi Traders Welfare Association demands repair of Tenkasi-Ambai road

16.12.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியில், தென்பொதிகை வியாபாரிகள் நல சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்க தலைவர் கட்டி அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், செயலாளர் நவாஸ்கான் அனைவரையும் வரவேற்றார்.

துணைத் தலைவர் பழக்கடை சுலைமான், துணைச் செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் முகமது யூசுப், முருகானந்தம், மீரான், முகமது அப்துல் காதர், பிச்சையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தென்காசி முதல் அம்பை வரை உள்ள குண்டும், குழியுமான சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும். திருமலையப்பபுரம் முதல் கோவிந்தப்பேரி வரை உள்ள சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும்,
தென்பொதிகை வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் திருமலையப்பபுரத்தில், இலவச மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,
வியாபாரிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கந்து வட்டிக்காரர்கள் வியாபாரிகளை துன்புறுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் காமராஜ், சண்முகராஜ், அப்பாஸ், சுப்பிரமணி, செல்வம், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தென்பொதிகை வியாபாரிகள் நலசங்கத்தின் பொருளாளர் பாக்யராஜ் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *