April 29, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்கள்

1 min read

Chief Minister camps with people in Tenkasi district

17.12.2023

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் என்ற திட்டப்படி 55 இடங்களில் முகாம்கள் நடைபெற உள்ளது.

இது பற்றி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் துரை இரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துவரும் தமிழ்நாடு முதலமைச்சர் கள ஆய்வில் முதலமைச்சர் என்ற முன்னெடுப்பின் கீழ் மண்டல அளவில் ஆய்வுக்கூட்டங்கள் நடத்தி அரசின் சேவைகள் குறிப்பிட்ட காலத்திற்குள் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டியதை உறுதி செய்வது ஒவ்வொரு துறையின் பொறுப்பாகும் என கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்வு காண வலியுறுத்தி வருகிறார்கள் தமிழ்நாடு முதலமைச்சரின் முன்னெடுப்பின் நீட்சியாக அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொதுமக்களுக்கு அரசு அலுவலர்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைபடுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும். சென்று சேரும் வண்ணம் மற்றுமொரு மைல்கல்லாக மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம் முதல்வரின் முகவரி துறையால் நடைமுறைப் படுத்தப்படுகிறது.

மக்களுடன் முதல்வர் என்ற இத்திட்டம் அன்றாடம் பொதுமக்கள் அதிகமாக அணுகும் 13 அரசு துறைகள் சார்ந்த கோரிக்கைகள் அடையாளம் காணப்பட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி தென்காசி மாவட்டத்தின் நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் அளவில் சம்பந்தப்பட்ட துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஒரே குடையின் கீழ் கோரிக்கைகளை பெற தென்காசி மாவட்ட 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் 55 சிறப்பு முகாம்கள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் பெறப்படும் அனைத்து மனுக்களும் 30 தினங்களுக்குள் சம்பந்தப்பட்ட துறைகளால் பரிசீலனை செய்யப்பட்டு தகுதியின் அடிப்படையில் உரிய சேவைகள் வழங்கப்படும் இந்த முகாம்கள் தென்காசி மாவட்டத்தில் 18.12.2023 திங்கள், 20.12.2023 புதன், 22.12.2023, 27.12.2023, 29.12.2023, 03.01.2024 05.01.2024 வெள்ளி கிழமை ஆகிய 7 தினங்களில் தென்காசி மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் மொத்தம் 440 வார்டுகளில் 55 முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

முகாம்களில் பெறப்படும் அனைத்து கோரிக்கைகளும் இதற்கென பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட மக்களுடன் முதல்வர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு,

சேவை வழங்குவதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் முகாம்களிலேயேபெற்று பரிசீலிக்கப்படும். மேலும் இணையவழி விண்ணப்ப முறைகளில் சம்பந்தப்பட்ட துறைகள் முகாமிலேயே விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து முகாம்களிலும் இ சேவை மையங்கள் அமைக்கப்படும். முகாம்களில் கூட்டத்தை நெறிப்படுத்துதல். உரிய பாதுகாப்பு சட்டம் மற்றும் ஒழுங்கு, போன்றவற்றை எவ்வித குறைபாடும் இன்றி செய்திட காவல் துறையினரால் நடவடிக்கை எடுக்கப்படும்.தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன . பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அந்த செய்தி குறிப்பில் கேட்டு கொண்டுள்ளார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.