கடையம் பகுதியில் சாலைகளை சீரமைக்க கோரி போராட்டம் நடத்த முடிவு
1 min read
It was decided to hold a protest demanding the repair of roads in the area
18.12.2023
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ள இரவணசமுத்திரத்தில்
சமூக நல்லிணக்க கூட்டமைப்பு சார்பில், அனைத்து அரசியல் கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், ஊராட்சி மன்ற நிர்வாகிகள், இணைந்து கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு சமூக நல்லிணக்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கட்டி அப்துல் காதர் தலைமை தாங்கினார். இரவணசமுத்திரம் ஆதம் ஹாஜியார் பள்ளிவாசல் தலைவர் நெய்னார் முஹம்மது ஹாஜி,
மஸ்ஜிதுல் ரஹீம் பள்ளிவாசல் முன்னாள் தலைவர் ஷாகுல் ஹமீது,
மஸ்ஜிதுல் அக்பர் பள்ளிவாசல் தலைவர் முகமது கனி, கடையம் ஒன்றிய ஜமாஅத்துல் உலமா சபை செயலாளர் ஜப்பார் யூசுஃபி, வீரா சமுத்திரம் பள்ளிவாசல் தலைவர் காஜாமைதீன், பொட்டல்புதூர் பள்ளிவாசல் துணைத்தலைவர் செய்யது மசூது, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிரைமரி தலைவர் முகம்மது இக்பால், இளைஞரணி பீரப்பா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மமக மாவட்ட துணைச் செயலாளர் கோதர் மைதீன், எஸ்.டி.பி.ஐ முதலியார்பட்டி நகர தலைவர் அப்துல் அஜீஸ், திமுக ஒன்றிய பொருளாளர் அஜீஸ் அஹமது,மஸ்ஜித் நூர் (ஜாக் அமைப்பு) செயலாளர் சிராஜுதீன் தேசிய லீக் கட்சி பொறுப்பாளர் பாதுஷா, வார்டு உறுப்பினர் இர்ஷாத் உள்ளிட்டோர் கண்டித்து பேசினர்.
இக்கூட்டத்தில் திருமலையப்பபுரம் முதல் கோவிந்த பேரி வரை உள்ள சாலை பல ஆண்டுகளாக போடப்படாமல், குண்டும் குழியுமாக இருந்து வரும் நிலையில், தற்போது காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டு பல மாதங்களாகியும் இன்னும் பணிகள் துவங்கப்படாமல் உள்ளது. தற்போது அந்த சாலையில் அதிகமான விபத்துகள் நடக்கிறது. எனவே இந்த சாலையை உடனடியாக அமைக்காவிடில் வருகிற 27.12.23 அன்று காலை 10 மணி அளவில், தென்காசி அம்பை மெயின் ரோட்டில் ரவணசமுத்திரம் விலக்கு பகுதியில், மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என்றும் இப் போராட்டத்தில்
அனைத்து சமுதாய நிர்வாகிகள், அனைத்து ஜமாத் நிர்வாகிகள், அனைத்துக் கட்சி நிர்வாகிகள், அனைத்து உள்ளாட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உட்பட, சுமார் ஆயிரம் பேர் கலந்து கொண்டு,
இந்த மறியலில் ஈடுபடுவது, என முடிவு செய்யப்பட்டு ள்ளது. மேலும் தென்காசி முதல் அம்பை வரை உள்ள சாலையில் அதிகமான விபத்துகள் நடைபெறுவதால் அதனையும் சரி செய்ய வேண்டும் என்றும், மேலும் கேரளாவின் கனரக வாகனங்களால் சாலைகள் அதிகமாக சேதப்படுகிறது, விபத்துகள் ஏற்படுகிறது. இதற்கு மாவட்ட ஆட்சியர் தீர்வை ஏற்படுத்த வேண்டும், என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமுமுக ஒன்றிய செயலாளர் அஸார், முதலியார்பட்டி தலைவர் காலித், எஸ்டிபிஐ முதலியார்பட்டி
நகர துணைத்தலைவர் ஜவகர் அலி, செயலாளர் முஹமத் மீரான், துணை செயலாளர் நதிம், சம்மன்குளம் கிளை தலைவர் முஹமத் அசன், பொட்டல்புதூர் நகர தலைவர் விஸ்வா ஹாஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.