பாகிஸ்தானுடன் பேசவில்லை என்றால் காசாவுக்கு ஏற்பட்ட கதிதான் நமக்கும்: பரூக் அப்துல்லா சொல்கிறார்
1 min read
If we don’t talk to Pakistan, Gaza will be the same for us: Farooq Abdullah says
26.12.2023
தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும், ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியுமான பரூக் அப்துல்லா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:
நமது நண்பர்களை மாற்றலாம். ஆனால் அண்டை வீட்டாரை மாற்றமுடியாது என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கூறியிருந்தார்.
அண்டை நாட்டுடன் நட்பாக இருந்தால் இருவரும் முன்னேற முடியும். பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை தொடரவேண்டியது அவசியம். தற்போது நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராகப் போகிறார்.
நாங்கள் இந்தியாவுடன் பேசத் தயார் என சொல்கிறார்கள். பாகிஸ்தானுடன் பேச நாம் ஏன் தயாராக இல்லை?
பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணாவிட்டால், இஸ்ரேலியப் படைகளால் குண்டுவீசித் தாக்கப்படும் காசாவிற்கு ஏற்பட்ட கதியை இந்தியா சந்திக்க நேரிடும். அடுத்த காசாவாக ஜம்மு காஷ்மீர் மாறிவிடும் என தெரிவித்தார்.