August 2, 2026

Seithi Saral

Tamil News Channel

தீவுத்திடலில் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்

1 min read

Vijayakanth’s body will be kept in the island for public tribute

28.12.2023
சென்னை தீவுத்திடலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல் வைக்கப்படும் என்று தேமுதிக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்தின் மரணம் என்பது கட்சிக்கும், திரையுலகிற்கும், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் பேரிழப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள், கட்சித் தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் கலைத்துறையினர் அஞ்சலி செலுத்தும் வகையில் அவரின் உடல் சென்னை அண்ணாசாலையில் உள்ள தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை) காலை 6 மணியில் இருந்து நண்பகல் 1 மணி வரை பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் உடல் வைக்கப்படும். நண்பகல் 1 மணிக்குப் பின்னர் விஜயகாந்தின் உடல் பூந்தமல்லி சாலை வழியாக ஊர்வலமாக கட்சி தலைமை அலுவலகத்திற்கு எடுத்துவரப்படுகிறது. இதையடுத்து, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் மாலை 4.45 மணியளவில் விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *