May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தில் ரூ 2.16 கோடி செலவில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள முடிவு

1 min read

Tenkasi district panchayat committee meeting decided to carry out development works at a cost of Rs 2.16 crore

29.12.2023
தென்காசி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வைத்து நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு தென்காசி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதயகிருஷ்ணன், மாவட்ட ஊராட்சி செயலாளர் ருக்மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட ஆலங்குளம், தென்காசி, கடையம், கடையநல்லூர், கீழப்பாவூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, மேல நீலிதநல்லூர், வாசுதேவநல்லூர், ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் சிமெண்ட் கான்வாய், வாறுகால் அமைத்தல், கான்கிரீட் தளம், அமைத்தல் அணுகு சாலை அமைத்தல் தேவர் பிளாக் சாலை அமைத்தல் தண்ணீர் தொட்டி அமைத்தல் சிறிய பாலம் கட்டுதல் வீட்டு குடிநீர் இணைப்பு வசதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு 2023 -24 ம் ஆண்டு 15 வது ஒன்றிய நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகை 2 கோடியே 90 லட்சத்து 17 ஆயிரத்தில் 10% நிர்வாக செலவினம் போக மீதமுள்ள தொகையில் வரையறுக்கப்படாத நிதி ரூபாய் 1 கோடியே 4 லட்சத்தி 46 ஆயிரத்து 120, மற்றும் குடிநீர் பணிகளுக்கு 78 லட்சத்து 34 ஆயிரத்து 590, சுகாதாரப் பணிகளுக்கு ரூபாய் 78 லட்சத்தி 34 ஆயிரத்து 590 என மொத்தம் 2 கோடியே 61 லட்சத்தி 15 ஆயிரத்து ,300 மதிப்பீட்டில் தென்காசி மாவட்ட ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் சந்திர லீலா, மதிமுத்து, தேவி, சுதா, கனிமொழி, பூங்கொடி, சாக்ரடீஸ், சுப்பிரமணியன், சுதா, மைமூன் பிவி, ஆகியோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.