May 19, 2024

Seithi Saral

Tamil News Channel

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் தனித்து போட்டி- மம்தா பானா்ஜி அறிவிப்பு

1 min read

Trinamool Congress alone in West Bengal – Mamata Banerjee announced

29.12.2023
வடக்கு 24 பா்கானாக்கள் மாவட்டத்தில் கட்சித் தொண்டா்கள் மத்தியில் மம்தா பானர்ஜி பேசியதாவது:-

எதிா்க்கட்சிகள் அனைவரும் திருடா்கள் என்று முத்திரை குத்த பா.ஜ.க. முயலுகிறது. நாட்டின் ஜனநாயகத்தை மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் முறியடிக்க முயற்சித்து வருகிறது.

மேற்கு வங்கத்தில் காங்கிரசும், மாா்க்சிஸ்ட் கம்னிஸ்ட் கட்சியும் பா.ஜ.க.வுடன் ரகசிய கூட்டணி அமைத்து நமது கட்சிக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. தேசிய அளவில் பா.ஜ.க.வை எதிா்ப்பதற்காகவே இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தைப் பொறுத்த வரையில் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ.க. வுக்கு எதிராகப் போராடி வருகிறது. மக்களவைத் தோ்தலிலும் திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே பா.ஜ. க.வை எதிா்த்து நிற்கும்.

இந்த தடவையும் திரிணாமுல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடும். காங்கிரசுக்கும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக்கும் மக்கள் வாக்களிப்பதை தவிர்க்க வேண்டும்.

பா.ஜ.க. தனது அரசியல் லாபத்துக்காக மேற்கு வங்க மாநில மக்களின் குடியுரிமை விஷயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இங்குள்ள மக்கள் பலா் வங்கதேசத்தில் இருந்து சட்ட விரோதமாக ஊடுவியவா்கள் என்று பிரசாரம் செய்கிறது. இதன் மூலம் மக்கள் மத்தியில் தவறான தகவல்களை பரப்புகின்றனா்.

முன்பு குடியுரிமை விவகாரத்தில் மாவட்ட கலெக்டர்கள்தான் முடிவெடுத்து வந்தனா். இப்போது, அந்த உரிமை அவா்களிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. குடியுரிமை இல்லாத மக்கள் எவ்வாறு அரசின் நலத்திட்டங்களைப் பெற முடியும்?

இவ்வாறு அவர் பேசினார்.

மக்களவைத் தோ்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக முக்கிய எதிா்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானா்ஜி, கூட்டணிக் கட்சிகள் மீது இவ்வாறு குற்றம் சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில், மேற்கு வங்கத்துக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, ‘குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தில் அதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டோம் என்று மம்தா பானா்ஜி மக்களை தவறாக வழி நடத்துகிறாா். அச்சட்டம் அமலாக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை’ என்று கூறியிருந்தாா்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.