May 3, 2024

Seithi Saral

Tamil News Channel

ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்

1 min read

Chief Minister MK Stalin met Governor RN Ravi

30.12.2023

தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.
அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர்.
இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5மணியளவில் சந்தித்து பேசினார்.

அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆளுநர் மாளிகை அறிக்கை


தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஆளுநர் ஆர்.என்,ரவியும், முதலமைச்சர் ஸ்டாலினும் மாநிலம் தொடர்பான பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடினர்.

இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். ஆளுநர், தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிக்பை மீண்டும் வலியுறுத்தினர். இருவரும் தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

அரசியலமைப்பு சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனான சந்திப்பு சுமூகமாக இருந்தது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.