திருவள்ளூரில் பெண்போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை
1 min readPolicewoman hanged herself in Tiruvallur
31.12.2023
திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் போலீசாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தவர் ரோஜா. இவரது கணவர் ராஜ்குமார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று பெண் காவலர் ரோஜாவின் தாயார் தன் சொந்த மாவட்டமான திருவண்ணாமலையில் இருந்து திருவள்ளூர் வந்திருந்தார்.
ரோஜா தனது இரண்டு குழந்தைகளையும் தன்னால் சரியாக கவனிக்க முடியவில்லை என அம்மாவுடன் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.
நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக பெண் காவலர் ரோஜா, காவலர் குடியிருப்பில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்
இதை தொடர்ந்து பெண் காவலர் ரோஜாவின் கணவர் ராஜ்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பெண் காவலர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவள்ளூர் மாவட்ட போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-ஜெயஸ்ரீ, நிருபர்.