September 14, 2024

Seithi Saral

Tamil News Channel

ராணி வேலு நாச்சியாரின் வீரம் ஊக்கம் அளிக்கிறது: பிரதமர் பெருமிதம்

1 min read

Rani Velu Nachiyar’s bravery inspires: PM proud

31/12/2023
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் மனதின் குரல் (‘மன் கி பாத்’) நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இன்று 108-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று 108-வது மன் கி பாத் அத்தியாயங்களில் பொதுமக்களின் பங்கேற்புக்கான பல எடுத்துக்காட்டுகளை பார்த்தோம். அவர்களிடமிருந்து உத்வேகத்தை பெற்றுள்ளோம். 108 எண்ணின் முக்கியத்து வமும், புனிதத்தன்மையும் ஆய்வு செய்யப்பட்டது. மாலை மணிகள் 108, ஜெபம் 108, கோவில்படிகள் 108 என இந்த எண் அபரிமிதமான நம்பிக்கை கொண்டது.
இன்று புதிய ஆற்றலுடனும், வேகத்துடனும் புதிதாக வளர வேண்டும் என்று நாம் தீர்மானிக்க வேண்டும்.
நாளைய சூரிய உதயம் 2024-ம் ஆண்டு முதல் சூரிய உதயமாகும். நாம் 2024-ம் ஆண்டுக்குள் நுழைகிறோம். இந்தியா தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது. வளர்ந்த இந்தியாவின் உணர்வால், தன்னம்பிக்கை உணர்வோடு திகழ்கிறது. 2024-ம் ஆண்டி லும் அதே உணர்வையும் வேகத்தையும் நாம் பராமரிக்க வேண்டும்.

இந்தியா கண்டுபிடிப்புகளின் மையமாக மாறி இருக்கிறது. அதை நாம் நிறுத்தப் போவதில்லை. 2015-ம் ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டில் 81-வது இடத்தில் இருந்தோம். இன்று 40-வது இடத்தில் உள்ளோம்.
நாட்டு, நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தபோது நாடு முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்தது. தி எலிபென்ட் விஸ்பரர்ஸ் படத்துக்கு கிடைத்த கவுரவத்தை கேட்டதும் யார் மகிழ்ச்சி அடையவில்லை? இந்த இரண்டு ஆஸ்கர் விருது மூலம் இந்தியாவின் படைப்பாற்றலை உலகமே கண்டு கொண்டது. சுற்றுச்சூலுடனான நமது தொடர்பை புரிந்துகொண்டது.

சந்திரயான்-3 வெற்றிக்காக இன்றும் மக்கள் எனக்கு வாழ்த்து செய்திகளை அனுப்புகிறார்கள். என்னை போலவே நீங்களும் நமது விஞ்ஞானிகளை பற்றி, குறிப்பாக பெண் விஞ்ஞானிகள் பற்றி பெருமைப்படுவீர்கள் என்று நம்புகிறேன்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றியது உள்பட பல சிறப்பான சாதனைகளை இந்த ஆண்டு இந்தியா செய்துள்ளது.

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியின்போது பாஷினி என்ற செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) கருவி முதல்முறையாக பயன்படுத்தப்பட்டது. பாஷினி மூலம் இந்தி உரையின் தமிழ்ப் பதிப்பை தமிழக பார்வையாளர்கள் ஒரே நேரத்தில் கேட்டனர்.

காசி தமிழ் சங்கமத்தில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அவர்களுடன் தொடர்பு கொள்ள பாஷினி செயற்கை நுண்ணறிவு கருவி பயன்படுத்தப்பட்டது. பொதுமேடையில் நான் இந்தியில் உரையாற்றினேன். அதை தமிழ்நாட்டு மக்கள் அதே நேரத்தில் தமிழ் மொழியில் கேட்டனர்.

நிகழ் நேர மொழி பெயர்ப்பு தொடர்பான ஏஐ கருவிகளை ஆராய இளம் தலைமுறையினரை கேட்டு கொள்கிறேன்.

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு தொடர்பாக நாடு முழுவதும் உற்சாகம் நிலவுகிறது. மக்கள் தங்கள் உணர்வுகளை பல வழிகளில் வெளிப்படுத்துகிறார்கள். சில நாட்களாக அயோத்தியில் பல புதிய பாடல்களும், பஜனைகளும் இயற்றப்பட்டிருக்கிறது. பலர் புதிய கவிதைகளையும் எழுதுகிறார்கள்.

இதுபோன்ற அனைத்து படைகளையும் ஸ்ரீராம் பஜன் என்ற ஹேஷ்டேக்குகளுடன் சமூக ஊடகங்களில் பகிருமாறு கேட்டுக் கொள்கிறேன். இது உணர்ச்சிகள் மற்றும் பக்தியின் ஓட்டமாக மாறும். இதில் அனைவரும் ராமரின் நெறிமுறையில் மூழ்கி விடுவார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் நம் பாரத பூமியை பெருமை அடைய செய்த மகள்கள் உள்ளனர். சாவித்ரிபாய் பூலே, ராணி வேலு நாச்சியார் ஆகியோரின் ஆளுமை ஒரு கலங்கரை விளக்கம் போன்றது. இது ஒவ்வொரு கால கட்டத்திலும் மேலும் பெண் சக்திக்கு வழிகாட்டும். இருவரின் பிறந்த நாளை வருகிற ஜனவரி 3-ம் தேதி கொண்டாட உள்ளோம்.

அந்நிய ஆட்சிக்கு எதிராக போராடிய நாட்டின் பல பெரிய ஆளுமைகளில் ராணி வேலு நாச்சியாரின் பெயரும் ஒன்று. அவரை தமிழ்நாட்டின் என் சகோதர, சகோதரிகள் இன்றும் வீரமங்கை என்று நினைவு கூருகிறார்கள்.

ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடிய ராணி வேலு நாச்சியாரின் வீரம் மிகவும் ஊக்கம் அளிக்கிறது. சிவகங்கை ராஜ்ஜியத்தின் மீதான தாக்குதலின்போது மன்னராக இருந்தார். அவரது கணவர் ஆங்கிலேயர்களால் கொல்லப் பட்டார்.

ராணி வேலு நாச்சியாரும் அவரது மகளும் எதிரிகளிடம் இருந்து தப்பினர். மருது சகோதரர்களுடன் இணைந்து ஒரு அமைப்பை உருவாக்குவதிலும், படை வளர்ப்பதிலும் பல ஆண்டுகளாக இடைவிடாமல் மும் முரமாக செயல்பட்டனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரை முழு தயார் நிலையுடன் தொடங்கி மிகுந்த தைரியத்துடனும் உறுதியுடனும் போராடினார். ராணுவத்தில் முதல் முறையாக அனைத்து மகளிர் குழுவை உருவாக்கியவர்களில் ராணி வேலு நாச்சியாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்..

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.