May 8, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் பாலியல் வன்முறை ஒழிப்பு விழிப்பணர்வு பேரணி

1 min read

Sexual Violence Awareness Rally in Tenkasi

6.1.2024
தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான எதிரான வன்முறை ஒழிப்பு விழிப்பணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருதுரை இரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பாக தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சார பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருதுரை இரவிச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு பேரணி தென்காசி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தொடங்கி மேம்பாலம், கூலக்கடை பஜார், வழியாக காசிவிஸ்வநாதர் கோவில் வந்தடைந்தது.

பேரணியின் கருப்பொருளாக பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார சமத்துவம். வரதட்சனை கொடுமை பெண்சிசுக் கொலை. கல்வியில் பெண்களின் பங்கு. குழந்தைகள் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள். பெண்களுக்கு சொத்துரிமையில் பங்கு போன்றவைகளை வெளிப்படுத்தும் பதாகைகளும் பிரச்சாரங்களும் பேரணியில் இடம்பெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி காசி விஸ்வநாதர் கோவிலை அடைந்தவுடன் மெழுகுவர்த்தி ஏந்தி அனைத்து துறை அலுவலர்கள் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் வட்டார இயக்க மேலாளர்கள். வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் அனைவரும் உறுதி மொழி ஏற்றுகொண்டனர். இதில் சுமார் 300 பேர் கலந்து கொண்டனர்.

உறுதி மொழியின் விவரம் பின்வருமாறு.

ஆண் குழந்தைகளையும் பெண் குழந்தைகளையும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக வளர்ப்போம். வீட்டு வேலைகளை பெண்களும், ஆண்களும் சமமாக பகிர்ந்து கொள்வோம். பெண்கள் விரும்பும் உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம். அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம். அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்படுவதை அனுமதிப்பயோம்.அனைத்து செயல்பாடுகளிலும் பெண்கள் சமமாக முடிவெடுப்பதை உறுதி செய்வோம் பாலின சமத்துவம் எங்கள் வாழ்வில் எப்போதும் கடைபிடிப்போம் சமத்துவத்தை குடும்ப உறுப்பினர்கள் மனதில் விதைத்து வன்முறை எங்கு நடந்தாலும் தலையிட்டு நீதி கேட்டு வன்முறையற்ற சூழலை உருவாக்க பாடுபடுவோம்.

இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோனி பெர்னாண்டோ, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் பெ.மதிவதனா உதவி துணை காவல் கண்காணிப்பாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்புலனாய்வு பிரிவு) ரமேஷ் காவல் ஆய்வாளர் அன்னலெட்சுமி உதவி காவல் ஆய்வாளர் ரத்னபால் சாந்தி மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் உதவி திட்ட அலுவலர்கள் பிரபாக கலைச்செல்வி ஜெய்கணேஷ் கவியரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.