கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி மாணவர் பலி
1 min read
Student killed by electric shock near Kadayanallur
6.1.2024
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே கம்பனேரியில் மின்சாரம் பாய்ந்து இறந்த மாணவர் இல்லத்திற்கு கடையநல்லூர் அதிமுக எம்எல்ஏ செ கிருஷ்ணமுரளி நேரில் சென்று ஆறுதல் கூறியதோடு நிதியுதவியும் வழங்கினார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கம்பனேரி கிராமம் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் முருகன் என்பவரது மகன் மதன் (வயது 20) இவர் கடையநல்லூர் அரசு கலை அறிவியல் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் சமீபத்தில் வீட்டில் உள்ள ஆடு மாடுகளுக்கு அருகில் உள்ள தன்னுடைய தோட்டத்திற்கு சென்று புல் அறுத்துவிட்டு புல் கட்டை தலையில் சுமந்தவாறு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் துருப்பிடித்து அறுந்து அறுந்திருந்த உயர் அழுத்த மின் கம்பி வயல்வெளியில் அறுந்து கிடந்துள்ளது. எதிர்பாரா விதமாக மின் கம்பியில் மதன் மிதித்ததில், அவர் மீது மின்சாரம் பாய்ந்து உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.
இந்த தகவல் அறிந்த தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ. கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா அவரது இல்லத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரித்து ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணை செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், கடையநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வசந்தம் முத்துப்பாண்டியன், கடையநல்லூர் நகர செயலாளர் எம் கே முருகன், மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், பெரியதுரை, பொன்னுசாமி, மதியழகன், ராமர் பாண்டியன், எஸ் எம் பாபு மற்றும் கம்பேனரி அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.