June 17, 2026

Seithi Saral

Tamil News Channel

ரஷ்ய அதிபர் சொத்து மதிப்பு ரூ.16 லட்சம் கோடி

1 min read

ரஷிய அதிபர் புதின்

The Russian president’s assets are worth Rs.16 lakh crore

22.1.2023
ரஷ்ய அதிபரின் சொத்து விவரம் வெளியாகி உள்ளது. 2012 ஆம் ஆண்டு முதல் ரஷ்ய அதிபராக பதவி வகித்து வருபவர் விளாமிதிர் புதின். இவரது ஆண்டு வருமானம் 1.4 லட்சம் டாலர் என்றும் 800 சதுர அடியில் வீடு, 3 கார்கள் மட்டுமே தன்னிடம் இருப்பதாகவும் முன்னதாக அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் புதினின் உண்மையான சொத்து மதிப்பு குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதினின் சொத்து மதிப்பு குறித்து வெளியான தகவலின் அடிப்படையில், அவரது மொத்த சொத்து மதிப்பு 200 பில்லியன் டாலர். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 16 லட்சம் கோடி ஆகும். கருங்கடலை ஒட்டி அவருக்கு 1.9 லட்சம் சதுர அடியில் மிகப் பெரிய மாளிகை உள்ளது. இதன் மதிப்பு 11 ஆயிரத்து 500 கோடி ஆகும். இந்த மாளிகையை பராமரிப்பதற்கு மட்டும் 2 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 20 லட்சம்) செலவிடப்படுகிறது.

மேலும், 19 பங்களா வீடுகள், 700 கார்கள், 58 விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் 6 லட்சம் டாலர் (இந்திய மதிப்பில் 5 கோடி) மதிப்பில் கைக்கடிகாரங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது. தி ப்ளெயிங் என்ற விமானத்தில் தங்கத்தில் ஆன கழிவறை அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *