June 11, 2026

Seithi Saral

Tamil News Channel

பாடகி பவதாரிணி மரணம்- உடலுக்கு நடிகர்கள், இயக்குனர்கள் நேரில் அஞ்சலி

1 min read

Death of singer Bhavatarini- Actors, directors pay tribute to her body in person

26.1.2024
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ் சினிமாவில் இசைஞானி என ரசிகர்கள் அழைக்கும் அளவுக்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்தவர்.

அவரது மகள் பவதாரிணி பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார். அவர் தற்போது திடீரெனெ மரணம் அடைந்துவிட்டதாக தகவல்வந்திருக்கிறது.
திருமதி. பவதாரிணி புற்றுநோய்க்காக இலங்கையில் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் சற்று முன் காலமானார். அவருக்கு வயது 47 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

பவதாரிணி மறைவு ரசிகர்களுக்கும் சினிமா துறையினருக்கும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் இன்று மதியம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலையம் வந்தடைந்த பவதாரிணி உடல் தியாகராய நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு பொதுமக்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலிக்காக பவதாரிணி உடல் வைக்கப்பட்டுள்ளது.

பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பொதுமக்களும், திரை பிரபலங்களும் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர்கள் ராமராஜன், சிவகுமார், விஜய் ஆண்டனி, ஆனந்த்ராஜ், ஸ்ரீகாந்த், இயக்குனர் வெற்றிமாறன், கேயார் மற்றும் நடிகர் சங்கம் சார்பில் விஷால், கார்த்திக் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *