May 20, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக ஏ.கே.கமல் கிஷோர் நியமனம்

1 min read

AK Kamal Kishore has been appointed as Tenkasi district administration chief

29.1.2024
தமிழகத்தில் நேற்று முன்தினம் 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு ள்ளனர். அதன்படி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 11 மாத காலமாக பணியாற்றி வந்த துரை இரவிச்சந்திரன் உயர்கல்வித்துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மாற்றுத் திறனாளிகள் நலவாரிய இயக்குனராக பணியாற்றி வந்த.ஏ.கே. கமல் கிஷோர் தென்காசி மாவட்ட புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப் பட்டுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்த வந்த தென்காசி கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது. அதன் முதல் ஆட்சித் தலைவராக 2019 ல ஜி.கே.அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டார் அவரை தொடர்ந்து 2020 ல் கீ.சு.சமீரன்,2021 ல் எஸ்.கோபால சுந்தரராஜ், 2022 ல் பி.ஆகாஷ் அவரைத் தொடர்ந்து 2023 ல் துரை இரவிச்சந்திரன் ஆகியோர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றினார்கள்.
இப்போது 2024 ல் ஏ.கே.கமல்கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் 2019 ஆம் ஆண்டு புதிதாக உதயமானது முதல் இதுவரை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்

இவர்களில் கீ.சு‌.சமீரன் பணியிடமாற்றம் செய்யப்பட்ட போது சந்திரகலா என்பவர் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்டார் ஆனால் அவர் மாவட்ட ஆட்சித் தலைவர் பொறுப்பு ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாகவே பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதன் பிறகு எஸ்.கோபால சுந்தர்ராஜ் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்ட 6 ஆண்டுகளில் 7 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 11 மாதங்கள் மட்டுமே தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவராக பணியாற்றி வந்த துரை இரவிச்சந்திரன் உயர் கல்வித் துறை துணைச் செயலாளராக பதவி உயர்வு மற்றும் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட புதிய ஆட்சித் தலைவராக ஏ.கே. கமல் கிஷோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தென்காசி போன்ற புதிய மாவட்டத்தில் திறமையான மாவட்ட ஆட்சித்தலைவர் ஒருவரை நியமனம் செய்து அவர் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பணியாற்றினால் தான் இந்த மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும் அதன் மூலம் மாவட்டம் வளர்ச்சி அடையவும் ஏதுவாக இருக்கும். இப்படி ஆண்டுக்கு ஒரு மாவட்ட ஆட்சித் தலைவரை நியமித்தால் மாவட்டம் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று தென்காசி மாவட்ட சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.