தென்காசி மாவட்ட பாஜக மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம்
1 min readTenkasi District BJP Women Executives Consultative Meeting
31.1.2024
தென்காசியில் நடைபெற்ற மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் மரகதா தலைமை தாங்கினார். பாஜக மாவட்ட செயலாளர் ராஜலட்சுமி முன்னிலை வகித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும்
மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் வளர்மதி வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக மகளிர் அணி தேசிய செயற்குழு உறுப்பினர் அஸ்வினி தென்காசி மாவட்ட பாஜக
மாவட்ட பொதுச் செயலாளர் பாலகுருநாதன் தென்காசி நகர பாஜக தலைவர் மந்திரமூர்த்தி ஆகியோர்
கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளையும் மருந்து இருப்பையும் உறுதி செய்ய வேண்டும்
தென்காசி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் உள்ளதை சரி செய்து குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்
தமிழக அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யும் பெண்களிடம் நடத்துனர்கள் ஏரளனமாக நடந்து கொள்ளாமல் இன்முகத்துடன் நடந்து கொள்ள கேட்டுக் கொள்வது
உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பாஜக மகளிர் அணி துணைத் தலைவி மாரியம்மாள், பேச்சியம்மாள், மகளிர் அணி மாவட்ட சமூக ஊடக பொறுப்பாளர் குணசீலா பாஜக ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் குற்றாலம் செந்தூர் பாண்டியன் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உமா மகேஸ்வரி, இந்துமதி வேங்கடம்மாள் ,நகர மற்றும் ஒன்றிய தலைவிகள் ஷீலா சங்கரம்மாள் ஈஸ்வரி தங்கம் முத்துலட்சுமி மாவட்ட மகளிர் அணி பொருளாளர் மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.இதனைத் தொடர்ந்து தென்காசி கீழப்புலியூரில் மத்திய அரசு மூலம் பயனடைந்த பயனாளிகள் சந்திப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது