கீழப்பாவூரில் காங்கிரஸ் சார்பில் இருசக்கர வாகன பேரணி
1 min readTwo-wheeler rally on behalf of Congress in Geezpavur
31.1.2024
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் நகர காங்கிரஸ் சார்பாக காங்கிரஸ் பேரியக்கத்தின் 139-ஆம் ஆண்டு விழா மற்றும் இந்திய நாட்டின் 75-வது குடியரசு தின விழாவை முன்னிட்டு இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பேரூராட்சி காங்கிரஸ் கமிட்டி சார்பில்
காங்கிரஸ் பேரியக்கத்தின்
இதனை முன்னிட்டு 139 ம் ஆண்டு விழாவை முன்னிட்டு 139 இடங்களில் காங்கிரஸ் கொடியேற்று விழா, இருசக்கர வாகன ஊர்வலம் நடைபெற்றது.முன்னதாக பெருந்தலைவர் காமராஜரின் திரு உருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சிகளுக்கு கீழப்பாவூர் நகர காங்கிரஸ் தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் நெல்லை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ராமசுப்பு, ஒருங்கிணைந்த முன்னாள் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கொடிக்குறிச்சி முத்தையா, சுரண்டை நகர்மன்ற தலைவர் வள்ளி முருகன், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் செல்வன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, வட்டார, நகர, கிராம காங்கிரஸ் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டு சுமார் 200 இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று 139 இடங்களில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றி வைத்து சிறப்பாக கொண்டாடினர். முன்னதாக பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவச் சிலைக்கு நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கீழப்பாவூர் நகர காங்கிரஸ் தலைவர் சிங்கக்குட்டி என்ற குமரேசன் சிறப்பாக செய்திருந்தார்.