May 10, 2024

Seithi Saral

Tamil News Channel

தென்காசியில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர்மறியல்- 400 பேர் கைது

1 min read

Jacto Jio protest in Tenkasi- 400 people arrested

31.1.2024
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஜாக்டோஜியோ அமைப்பின் சார்பில் காலை 10 மணியள வில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட 400 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

போராட்டத்திற்கு ஜாக் டோ-ஜியோ மா வட்ட ஒருங் கிணைப்பாளர்கள் திருமலை முருகன் பிச்சைக்கனி, சண் முக சுந்தரம். ராஜேந்திரன். ஆரோக்கிய ராஜ், முருகேஸ் ஆகியோர் த லைமை வகித்தி னர் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கழக மாவ ட்ட தலைவர் சங்கர் ஆரம்ப பள்ளி கூட்டணி மாவட்ட செயலாளர் மாரி முத்து, வருவாய்துறை மாவட ட்ட தலைவர் மாடசாமி, ஊரக வளர்ச்சி துறை மாவட்ட துணைத்தலைவர் அன்பரசு, தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழக காளிராஜ் கணினி ஆசிரியர் சங்க மாநில தலைவர் செல்வகுமார், முது நிலை ஆசிரியர் சங்க மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் பட்டா தாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் கிருபா சம்பதி ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மேல்நிலைப்பஹ் தலைமையாசிரியர் கழகமாவட்ட தலைவர் செந்தூர் பாண்டியன் ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் மாரியப்பன் ஆகி யோர் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மாநில உயர்மட்ட ட குழு உறுப்பினர் துரைசிங் வெங்க டேஷ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மாடசாமி, மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாநில தணிக்கையாளர் சுப்புராஜ் தமி ழண்டு நிலஅளவை ஒன்றி னைப்பு மாவட்ட தலைவர் பாலசுப்பிரமணியன், தமிழ் நாடு உதவி வேளாண்மை அலு வலர் சங்க மாவட்ட தலைவர் சண்முகம், சமூக நலத்துறை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் அகஸ்டின், கோட்ட தலைவர் பாபுராஜ் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினர் போராட்டத்தில் தமிழக முதலமைச்சர் தேர்தல் காலத்திலும், ஜாக்டோ ஜியோ மாநில மாநாட்டிலும் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற் றிட வலியுறுத்தியும், 1.042003 குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினை கைவிட்டு பழைய ஓய்வூதி யத் திட்டத்தினையே அமல்ப டுத்திட காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு,
உயர்கல்விக்கான ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலுயுறுத்தி போராட் டம் நடைபெற்றது. ஜாக்டோ ஜியோ நிதிக் காப்பாளர் ராஜ சேகர் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.