June 4, 2026

Seithi Saral

Tamil News Channel

மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டி- பாளை.மாணவி சிறப்பிடம்

1 min read

State level skating competition- Palai.Student Excellence

11.2.2024
சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பாளையங்கோட்டை ஆண்டனி பப்ளிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஜோஷினி கிரேஸ் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் உள்ள ஸ்கேட்டிங் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் மாநில அளவிலான
14 வயதுக்குட்பட்டோருக்கான 500 மீட்டர்,200 மீட்டர் தொலைவு களுக்கான ஸ்கேட்டிங் போட்டிகள் நடைபெற்றது. இதில் 200 மீட்டர் தொலைவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பாளையங்கோட்டை ஆண்டனி பப்ளிக் பள்ளி 7ம் வகுப்பு மாணவி ஜோஷினி கிரேஸ் மூன்றாமிடம் பெற்றார்.ஸ்கேட்டிங் பயிற்சியாளர் தூத்துக்குடி மதார்,உதவி பயிற்சியாளர் ஜீவா ஆகியோர் மாணவி ஜோஷினி கிரேஸை பாராட்டினார்கள்.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *