August 13, 2026

Seithi Saral

Tamil News Channel

பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் முதல் மந்திரி அசோக் சவான்

1 min read

Former Chief Minister Ashok Chavan joined BJP

13.2.2024
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்க்கட்சிகள் இணைந்து அமைத்துள்ள ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் தேர்தல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றன.

காங்கிரஸ் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் விலகி வருவது அக்கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர்.

கடந்த மாதம் மிலிந்த் தியோரா காங்கிரசில் இருந்து விலகி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவில் சேர்ந்தார். முன்னாள் மந்திரியாக இருந்த பாபா சித்திக்கும் அக்கட்சியில் இருந்து விலகினார்.

இதற்கிடையே, மகாராஷ்டிரா முன்னாள் முதல் மந்திரியும், போகர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான அசோக் சவான் காங்கிரஸ் கட்சியில் இருந்து நேற்று விலகினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர் சபாநாயகர் ராகுல் நர்வேகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தையும் அளித்தார். காங்கிரசில் இருந்து விலகிய அசோக் சவான் விரைவில் பா.ஜ.க.வில் இணைய போவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், மும்பையில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்த அசோக் சவான் இன்று பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருடன் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.சி. அமர் ராஜூர்கரும் பா.ஜ.க.வில் இணைந்தார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *