குற்றாலத்தில் காவல்துறை பழைய வாகனங்கள் ஏலம்
1 min readAuction of old police vehicles in Courtalam
1.3.2024
தென்காசி மாவட்ட காவல்துறையின் பழைய வாகனங்கள் நாளை மார்ச் 02 ம் தேதி பொது ஏலம் நடைபெற உள்ளதாக தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.பி.. சுரேஷ் குமார் அறிவித்துள்ளார்.
அதன்படி தென்காசி மாவட்ட காவல்துறையில் கழிவு செய்யப்பட்ட அரசு வாகனங்கள் நாளை 02.03.2024 காலை 10 மணிக்கு குற்றாலம் ஆயுதப்படை வளாகத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. இந்த ஏலத்தில் 03 இருசக்கர வாகனங்களும் 01 நான்கு சக்கர வாகனமும் ஏலம் விடப்படுகின்றன.
இதில் ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் இருசக்கர வாகனத்திற்கு 1,000/- ரூபாயும், நான்கு சக்கர வாகனத்திற்கு 5.000/- ரூபாயும் முன்பணம் கட்டி டோக்கன் பெற்றுக்கொள்ள வேண்டும். டோக்கன் பெற்றவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க முடியும். ஏலம் தொடர்பான சந்தேகங்களுக்கு என்ற 7305543727 மற்றும் 9498192345 தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
வாகனத்தை ஏலம் எடுத்தவர்கள் அன்றைய தினமே ஏலத் தொகையுடன் ஜி.எஸ்.டி தொகையையும் ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.பி.சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.