May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

20-ந் தேதி ஆயிரப்பேரி விநாயகர். முப்புடாதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

1 min read

20th is Ayraperi Vinayaka. Kumbhabhishekam at Muppudathi Amman temple

12.3.2024
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரியில் 20.03.2024 அன்று புதன்கிழமை அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது.

தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி கிராமத்தில் தேவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் மற்றும் அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ தட்சணாமூர்த்தி, ஸ்ரீ விஷ்ணு துர்க்கை, ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ பைரவர், ஸ்ரீ பரிவார சன்னதி, ஸ்ரீ பேச்சியம்மன், ஸ்ரீ இருளப்பர், ஸ்ரீ துர்க்கை அம்மன், ஆகிய தெய்வங்களுக்கு ஜீர்ணோத்தாரன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 20.03.2024 புதன்கிழமை காலை 9 மணிக்கு மேல் 11 மணிக்குள் நடைபெற உள்ளது.

இந்தக் கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு 18.03.2024 திங்கள்கிழமை காலை 6:30 மணிக்கு மேல் மங்கள இசை திருமுறை பாராயணம், தேவதா அனுக்ஞை,விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், பஞ்சகவ்ய பூஜை, கும்ப பூஜை, மஹாகணபதி ஹோமம், மஹாலட்சுமி ஹோமம், துர்கா ஹோமம், சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, பிரம்மச்சாரி பூஜை ,பூர்ணா ஹூதி தீபாராதனை நிகழ்ச்சியும்,

மாலை 04.30 மணிக்கு மேல் தீர்த்த சங்க்ரஹரணம் நிகழ்ச்சியும், மாலை 05.30 மணிக்கு மேல் மங்கள இசை, திருமுறை பாராயணம், வாஸ்து சாந்தி, ப்ரவேசபலி, ம்ருத்யு சங்க்ரஹரணம், அங்குரார் பணம், மஹா சங்கல்பம், ஆச்சாரிய வர்ணம், எஜமான வர்ணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலா ஹர்சனம், யாகசாலை பிரவேசம், அக்னி கார்யம், முதற்கால யாகசாலை பூஜை, பூர்ணாஹுதி, தீபாராதனை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும்,

அதனைத் தொடர்ந்து 19.03. 2024 செவ்வாய்க்கிழமை காலை 7 மணிக்கு மேல் மங்கள இசை, திருமுறை பாராயணம், காலை 8 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, சூரிய பூஜை, மண்டபார்ச்சனை, வேதி காய்ச்சனை, இரண்டாம் காலயாக சாலை பூஜை, ஷன்னபதி திரவிய ஹோமம், மூல மந்திரஹோமம், பூர்ணாஹுதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

மாலை 5 மணிக்கு எந்திர ஸ்தாபனம் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் மாலை 05.30 மணிக்கு மங்கள இசை திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், மாலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஸோமகும்ப பூஜை, சூரிய பூஜை ,மண்டபார்ச்சனை, வேதிகார்ச்சனை, மூன்றாம் கால யாகசாலை பூஜை, ஷன்னவதி திரவ்ய ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாஹுளஸதி தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும்,

20 3 2024 புதன்கிழமை காலை 5 மணிக்கு மேல் மங்கள இசை, திருமுறை பாராயணம் நிகழ்ச்சியும், காலை 8 மணிக்கு மேல் விக்னேஸ்வர பூஜை, புண்யாஹவாசனம், ஸோம கும்பபூஜை, சூர்ய பூஜை, மண்டபார்ச்சனை, வேதி கார்ச்சனை, பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம், நாடி சந்தானம், ஸபர்ஸாஹுதி, 4 ம் கால யாகசாலை பூஜை, ஷன்னவதி திரவிய ஹோமம், மூல மந்திரஹோமம், மகா பூர்ணாஹுதி, யாத்ரா தானம் தீபாராதனை நிகழ்ச்சியும்

காலை 8:50 மணிக்கு மேல் கடம் புறப்பாடு மற்றும் ஆலய பிரவேசம் நிகழ்ச்சியும், காலை 9 மணிக்கு மேல் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், அருள்மிகு ஸ்ரீ முப்புடாதி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நிகழ்ச்சியும், காலை 11 மணிக்கு மேல் மஹா அபிஷேகம் நிகழ்ச்சியும் 12 மணிக்கு மேல் அலங்கார தீபாராதனை மற்றும் மஹா அன்னதானம் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கல்லிடைக்குறிச்சி எம். கிருஷ்ணமூர்த்தி சர்மா மற்றும் எஸ். சிவசுப்பிர மணிய சர்மா ஆகியோர் மஹா கும்பாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை நடத்துகின்றனர். நாதஸ்வரம் நிகழ்ச்சியை ஆர் கே எஸ் ராஜா குழுவினரும், பாணி மேளம் கெண்டை நிகழ்ச்சியை ஆய்க்குடி எம் மணிகம்பர் குழுவினரும் செய்ய உள்ளனர் .மேலும் இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழக முன்னாள் சட்டத்துறை அமைச்சரும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் இசக்கி சுப்பையா, ஆயிரப் பேரி ஊராட்சி மன்றத் தலைவரும், தேவர் சமுதாய நாட்டாமையுமான தி.சுடலை யாண்டித்தேவர், கணக்காளர் இ.இசக்கித்தேவர் மற்றும் ஆயிரப்பேரி தேவர் சமுதாய பொதுமக்களும் சிறப்பாக செய்து வருகின்றனர்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.