தென்காசியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
1 min read
Inaugural Cooperative Bank Employees Demonstration in Tenkasi
13.3.2024
தென்காசியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
தென்காசி மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், கால தாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும், சங்கங்களில் பணிபுரிந்து பிப்ரவரி 2021 க்கு பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு உடனடியாக ஓய்வூதியம் அனுமதிக்கப்பட வேண்டும் ஏற்கனவே அனுமதிக்கப் பட்டுள்ள கருணை ஓய்வூதியம் ரூபாய் ஆயிரத்தை மைய வங்கி பணியாளர்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ள அதே அளவில் உயர்த்தி வழங்கப்பட வேண்டும் போன்ற 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி மாவட்ட தலைவர் சித்திரை, மாவட்ட செயலாளர் காளிதாசன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாவட்ட பொருளாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட பொருளாளர் சண்முகசாமி, மாவட்டத் துணைத் தலைவர்கள் செந்தூர் பாண்டியன், ஹரிஹரன், மாவட்ட இணைச் செயலாளர்கள் வேலம்மாள், முத்தையா, மாவட்ட போராட்டக் குழு தலைவர் விஸ்வநாதன், போராட்டக் குழு செயலாளர் சௌந்தரராஜன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கோரிக்கைகளை நிறைவேற்ற தவறும் பட்சத்தில் மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று மார்ச் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்ட முடிவில் கோரிக்கை பட்டியலை மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.