தென்காசி அருகே கஞ்சா விற்பனை 6 பேர் கைது
1 min read
6 arrested for selling ganja near Tenkasi
13.3.2024
தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 நபர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் 75 ஆயிரம் மதிப்புள்ள 7.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெற்கட்டும் செவல் கீழப்புதூர் சாலையில் அமைந்துள்ள சுடுகாட்டிற்கு அருகே சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த உள்ளாறு, தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த பூலித்துரை என்பவரின் மகன் காசித்துரை தலைவனார் (வயது 23), தூத்துக்குடியைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மகன் முத்து கல்யாணி (வயது 22), கீழப்புதூரைச் சேர்ந்த சின்னராஜ் என்பவரின் மகன் லட்சுமண குமார் (வயது 26), ராம்குமார் (வயது 27), சிந்தாமணிப்பேரி புதூரை சேர்ந்த வெள்ளத்துரை என்பவரின் மகன் கலை செல்வன்(வயது 19), மற்றும் தூத்துக்குடியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகியோர் மீது புளியங்குடி காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். மேலும் அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 75,000 மதிப்பிலான 7.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
சட்ட விரோதமாக லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது
புளியரை சோதனை சாவடி அருகே சார்பு ஆய்வாளர் தீபன் குமார் தலைமையிலான காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த தெற்கு கடையம் பகுதியை சேர்ந்த கருத்தையா என்பவரின் மகன் மாரி செல்வம் (வயது 35) என்ற நபரையும் புளியரை பெட்ரோல் பங்க் அருகே லாட்டரி சீட்டுகளை வைத்திருந்த பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் மாரீஸ்வரன் (வயது 23) ஆகிய இரண்டு நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். மேலும்
அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தார் ரூபாய் 7,800/-மதிப்பிலான 180 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர்கள் எட்டு பேர்களும் நீதிமன்ற காவலில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவு படி 15 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.