பாவூர்சத்திரம் அருகே சீல் வைக்கப்பட்ட மருத்துவ மனை திறப்பு- உயர்நீதிமன்றம் உத்தரவு
1 min read
Opening of sealed medical clinic near Pavoorchatram- High Court order
14.3.2024
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சீல் வைக்கப்பட்ட பிரபல தனியார் மருத்துவமனை உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அதிகாரிகள் வைத்த சீல் அகற்றி திறக்கப்பட்டது
தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தில் ஜே ஜே மருத்துவமனை என்ற பெயரில் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த மருத்துவ மனையை பிரபல அரசு மருத்துவர் ஜீவா ஜெயராமன் நடத்தி வருகிறார். இந்த மருத்துவமனையின் மருந்து கடை உரிமையாளராக ஜீவா ஜெயராமனின் கணவர் ஜெயராமன் நிர்வகித்து வருகிறார்.
இந்த மருத்துவமனையில் மிகவும் குறைந்த விலையில் மருத்துவ பணி செய்து பொதுமக்களுக்கு வருகின்ற நோய்களை தீர்த்து வைப்பதுடன் அவர்களின் பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப பணம் இல்லாவிட்டாலும் மருத்துவம் செய்து அவர்களது நோய்களை தீர்ப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார்கள். இதனால் இப்பகுதி பொதுமக்கள் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருவது இப்பகுதி பொதுமக்களால் சிறப்பான வரவேற்பையும் நன் மதிப்பையும் பெற்று செயல்பட்டு வருகிறது.
இவர்களது மருத்துவப் பணியின் மீது களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சிலர் போலி மருத்துவம் செய்வதாக கூறி கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்காசி கோட்டாட்சியர் இந்த மருத்துவமனைக்கு சீல் வைத்து தொடர்ந்து செயல்பட விடாமல் தடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அரசு மருத்துவர் ஜீவா ஜெயராமன் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தனது மருத்துவமனையின் மீது தவறாக எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கை ஆய்வு செய்த மதுரை உயர்நீதிமன்றம் மக்கள் ஆதரவுடன் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய நேரம் போக மீதி நேரம் தனது வீட்டின் அருகே பொதுமக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் அரசு மருத்துவர் ஜீவா ஜெயராமன் மருத்துவ சேவை செய்து வந்த நிலையில் அதை தடுக்கும் வகையில் மருத்துவமனையை சீல் வைத்ததுடன் தொடர்ந்து செயல்படாமல் தடுத்தது சட்டத்திற்கு புறம்பானது. எனவே உடனடியாக அந்த மருத்துவமனையை திறந்து பொதுமக்களுக்கு மருத்துவப் பணியாற்ற வேண்டும் என்றும் உடனடியாக தென்காசி கோட்டாட்சித் தலைவர் வைத்த சீலை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.நீதிபதியின் உத்தரவை தொடர்ந்து நேற்று தென்காசி கோட்டாட்சித் தலைவர் தாங்கள் வைத்த சீலை அகற்றுவதற்கு ஆலங்குளம் வட்டாட்சியருக்கு உத்தரவு பிறப்பித்தார் இதனை தொடர்ந்து நேற்று மாலையில ஆலங்குளம் வட்டாட்சியர் கிருஷ்ண வேல் கீழப்பாவூர் வருவாய் ஆய்வாளர் மாலினி கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் மற்றும் அரசு அதிகாரிகள் தென்காசி வழக்கறிஞர் நியாஸ் ஆகியோர் வடக்கு சிவகாமிபுரத்தில் இயங்கி வரும் ஜேஜே மருத்துவமனைக்கு வந்து தாங்கள் வைத்த சீலை உடனடியாக அகற்றினர் கடந்த பல நாட்களாக மூடப்பட்டிருந்த ஜே ஜே மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டதால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவர் ஜீவா ஜெயராமன் மருந்து ஆளுநர் ஜெயராமன் ஆகியோர் அரசு அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நியாஸ் கீழப்பாவூர் ராமச்சந்திர பாண்டி மூத்த வழக்கறிஞர் கீழப்பாவூர் பாண்டியராஜன் ஆகியோருக்கு தங்களது மேலான நன்றியை தெரிவித்துக் கொண்டனர்
போலி மருத்துவமனை என்று பொய்யான குற்றச்சாட்டை கூறி அரசு அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட மருத்துவமனை மீண்டும் திறக்கப்பட்டதால் இப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.