தென்காசி தொகுதியில் 37 பேர் மனுதாக்கல்
1 min read37 people petitioned in Tenkasi constituency
28.3.20
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 37 பேர்கள வேட்பு மனுதாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் கடந்த 20ம் தேதி மனு தாக்கல் துவங்கியது. முதல் நாள் முதல் 24ம்தேதி வரை யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை.. 25ம்தேதி முதல் மனு தாக்கல் செய்ய துவங்கினர். 25, 26ம் தேதிகளில் திமுக, பாஜ வேட்பாளர்கள் உட்பட 8பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர்.
இறுதி நாளான நேற்று அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட ஒரு சிலர் மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென நேற்று ஒரே நாளில் 29 பேர் மனுதாக்கல் செய்ய முன்வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மனு தாக்கல் வழக்கமாக காலை 11 மணிக்கு துவங்கி 3 மணிக்கு நிறைவ டையும் மொத்தம் 4மணி நேரம் மட்டுமே மனுதாக்கல் நடைபெறும். ஆனால் நேற்று எதிர்பாராத விதமாக 29 பேர் மனுதாக்கல் செய்ய வந்ததால் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது. இதில் ஒருவருக்கு சுமார் 30 நிமிடம் எடுத்துக் கொண்டதால் இரவு 9 மணி வரை மனு தாக்கல் நீடித்தது இத னால் கலெக்டர் மற்றும் அலுவலக ஊழியர்கள் ஓய்வின்றி தொடர்ச்சி யாக பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மேலும் நேற்று மனு தாக்கல் செய்த அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தவிர்த்து, அதே பெயரில் மேலும் 3 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாற்று வேட்பாளராக அவரது மகன் ஷியாம் கிருஷ்ணசாமி மனு தாக்கல் செய்தார்.. டாக்டர் கிருஷ்ணசாமி பெயரில் தாக் கல் செய்த 4 மனுக்கள் தவிர்த்து, புளியரையைச் சேர்ந்த பாபு பாண்டியன் மகன் கிருஷ்ண சாமி,. சிவகிரி மூர்த்தி மகன் கிருஷ்ணசாமி, சங்கரன்கோவில் கருப்ப சாமி மகன் கிருஷ்ண சாமி, மலையான்குளம் வெள்ளைச்சாமி மகன் கிருஷ்ணசாமி ஆகிய 4 கிருஷ்ணசாமிகளும் மனு தாக்கல் செய்தனர். இத னால் கிருஷ்ணசாமி என்ற பெயரில் மட்டும் மொத் தம் 8 பேர் மனு தாக்கல் செய்தனர்.
முதலில் தனிச் சின்னத்தில் போட்டியி டுவதாக அறிவித்த டாக்டர் கிருஷ்ணசாமி தனது பெயரிலேயே 8 பேர் மது தாக்கல் செய்ததால் அதி முகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டிய டுவதாக தனது முடிவை மாற்றி மனு தாக்கல் செய் ததாக தகவல் பரவியது.
மேலும் பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பான்டியன் பெயரிலும், திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் பெயரிலும் ராணிஸ்ரீகுமாரின் கணவர் ஸ்ரீகுமார் பெயரிலும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இசை மதிவாணன் பெயரிலும் நேற்று மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டன.
அதன்படி தென்காசி தொகுதியில் மொத்தம் 37 மனுக்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ள நிலையில் ஒருவரே தாக்கல் செய்த கூடுதல் மனுக்களை கழித்துப் பார்த்தால் 30 பேர் மனு தாக்கல் செய் துள்ளனர். மனுதாக்கல் செய்த விவரங்களை தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதி வேற்றும் பணி இரவு 10 மணிக்குப் பிறகும் தொடர்ந்து நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் துவங்கிய 7 நாட்களில் 8பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்த நிலையில், நேற்று ஒரேநாளில் 29 பேர் மனுதாக்கல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சியினர் மத்தியிலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.