தமிழகத்தில் விலைவாசி ஏறிவிட்டது- சங்கரன்கோவிலில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min readPrices have gone up in Tamil Nadu – Edappadi Palaniswami’s speech at Shankaran temple
28.3.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சங்கரன்கோவிலில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சாரபில் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சங்கரன் கோவிலில் நடைபெற்ற தேரதல் பிரசார பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் பேசியதாவது:-
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஏற்கனவே டாக்டர் கிருஷ்ணசாமி பலமுறை போட்டியிட்டு ள்ளார். இந்த முறை தொகுதி தருகிறோம் நீலகிரியில நில்லுங்கள் என்று அவரிடம் சொல்லி பார்த்தோம் ஆனால்அவர் இங்குள்ள மக்கள் மீது கொண்ட பாசத்தால் தென்காசி தொகுதியில் மீண்டும் நின்றே தீருவேன் என்று கூறினார் அதன்படி அதிமுக கூட்டணியில் போட்டியிடுகிறார் அவர் வெற்றி பெற்றால் தென்காசி நாடாளுமன்ற தொகுதி பிரசனைகளை கண்டிப்பாக தீர்த்து வைப்பார்.
இந்த நாடாளுமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி வெற்றி பெறுவதன் மூலம் அவரது குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் அதிமுக ஒரே தாளில் கூட்டணி கட்சிகளை முடிவு செய்து அன்றைய தினமே வேட்பாளர்களை அறிவித் ந்து ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நேற்று வரை வேட்பாளர்களை அறிவிக்க முடியாமல் உள்ளது. நாங்கள் கூட்டணியை எப்போதும் மரியாதையாக நடத்தி வருகிறோம்.
டாக்டர் கிருஷ்ணசாமி எந்த சின்னத்தில் வேண்டும் என்றாலும் நிற்கட்டும் என்று நாங்கள் கூறிவிட்டோம். ஆனால் அவர் இந்த முறை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறினார் அது எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. அதிமுகவை பொருத்தவரை நாங்களும் ஜெயிக்கவேண்டும் கூட்டணி கட்சிகளும் ஜெயிக்க வேண்டும். அதிமுகவை நம்பி வந்தவர்கள் யாரும் கெட்டுப்போனதில்லை அனைவரையும் வாழ வைத்த இயக்கம் அதிமுக நம்முடைய வேட்பாளர்களை விட கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம்.
பாஜ கூட்டணியிலிருந்து நாங்கள் ஏற்கனவே விலகிவிட்டோம் இப்போது அதை கள்ளக்கூட்டணி என கூறுவது தவறாகும். தமிழகத்தில் இப்போது விலைவாசி ஏறிவிட்டது ஒரு கிலோ அரிசி ரூபாய் 15 வரை அதிகரித்துள்ளது மளிகை சாமான்கள் 40 சதவீதம் வரை விலை உயர்ந்துவிட்டன அதிமுக ஆட்சியில் ரூஆயிரம் இருந்தால் சாதாரண மக்கள் வாழ்க்கை நடத்த முடியும். இப்போது விலைவாசி உயர்வால் ரூபாய் 10 ஆயிரம் இருந்தால்தான் வாழ்க்கை நடத்த முடியும். அதிமுக ஆட்சியில் நிலவரி, வீட்டு வரிகளை உயர்த்தியதே இல்லை மின் கட்ட ணத்தை சிறிதுகூட உயர்த்தவில்லை. அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சுமார் 52 லட்சம் பேருக்கு 7,300 கோடி செலவில் மடிக்கணினி வழங்கினோம். பெண்கள் திருமணம் செய்வதற்கு ரூ.50ஆயிரம், மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கினோம். இன்றைக்கு அந்தத் திட்டத்தை எல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது.
தமிழ்கத்தில் அதிகரிக்கும் போதை பொருட்கள் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். கடந்த 2020ம் ஆண்டு கொரோனா பரவிய போது அதிமுக ஆட்சி சிறப்பாக செயல்பட்டது. இந்தியாவிலேயே கொரோனாவை தடுத்து நிறுத்துவதில் தமிழகத்தின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது என பிரதமர் பாராட்டி பேசியிருந்தார். மக்களுக்கு தேவையான உணவு பொருட்களை ரேஷன் கடைகள் மூலமாக மாதங்கள் கொடுத்தோம். திளமும் வட்சம்பேருக்கு 3 வேளைக்கான உணவை அளித்தோம் அதிமுக ஆட்சி காலத்தில் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம். தென்காசி மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று நெல்லை மாவட்டத்திலிருந்து தென்காசியை பிரித்து தனி மாவட்டமாக மாற்றினோம். ஆலங்குளத்தில் அரசு மகளிர் கல்லூரி, சுரண்டை. கல்லூரிக்கு ரூ.18 கோடியில் கட்டிடங்கள் என எத்த னையோ திட்டங்களை மக்களுக்கு தந்தோம் எனவே இந்த தேர்தலில் தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைசர்கள் ராஜலட்சுமி கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி(எ( குட்டி யப்பா, தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர்கள் டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியன், பாப்புலர் முத்தையா, முன்னான எம்எல்ஏக்கள் துரையப்பா, சுப்பையா பாண்டியன் ராஜவர்மன், தென்காசி தெற்கு மாவட்ட அதிமு அவைத் தலைவர் இலஞ்சி எஸ்.கே. சண்முகசுந்தரம், தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் பொய்கை சோ.மாரியப்பன், பார்வர்டு பிளாக் தங்கபாண்டியன், மாவீரன் சுந்தரனார் மக்கள் இயக்கம் மாரியப்பபாண்டியன், முவேந்தர் புலிப்படை வழக்கறிஞர் பாஸ்கர், தமிழர் தேசிய களம் வையவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.