கணேசமூர்த்தி எம்.பி. சிகிச்சை பலனின்றி மரணம்
1 min readGanesh Murthy M.P. Death without treatment
28.3.2024
ஈரோடு தொகுதியின் தற்போதைய எம்பியாக உள்ள அ.கணேசமூர்த்தி மதிமுகவை சேர்ந்த நிலையில் கடந்த 2019ம் ஆண்டு திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி ஒதுக்கீடு செய்த போது திமுக சின்னமான உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்று திமுக எம்பியாக உள்ளார்.இதையடுத்து தற்போது 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுகவிற்கு திருச்சி தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் அறிவிக்கப்பட்ட போதிலும் எம்பி கணேசமூர்த்தி வேட்பாளர் அறிமுக கூட்டம் போன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில் கடந்த 24ம் தேதி வீட்டில் கணேசமூர்த்தி மூர்த்தி விவசாயத்திற்கு பயன்படுத்தக்கூடிய சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு விட்டதாக தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.,இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஈரோடு பெருந்துறை சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர்.இதன் பின்னர் மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர்., இருப்பினும் உடல் நலம் கருதி மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து ஈரோடு நகர காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில்.,கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எம்பி கணேசமூர்த்தி உடல்நலம் குறித்து மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ அவரது மகன் துரை வைகோ ஆகியோர் விசாரித்து விட்டு குடும்பத்தினருக்கு நம்பிக்கை தெரிவித்து சென்றனர்.இதன் பின்னர் 72மணி சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் குறித்து முழுமையாக தெரிவிக்க முடியும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் இன்று அதிகாலை 5:15மணியளவில் எம்பி கணேசமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அரசியல் கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.இதனை தொடர்ந்து ஈரோடு நகர போலீசார் எம்பி கணேசமூர்த்தி உடலை பெற்று பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல இருக்கின்றனர்.உயிரிழந்த கணேசமூர்த்தி தான் அரசியல் கட்சி நிர்வாகியாக மட்டுமின்றி சமூக ஆர்வலராகவும்,விவசாயிகள் நலன் சார்ந்து விவசாயிகளின் பல்வேறு போராட்டத்தில் பங்கேற்று அவர்களுக்கு உரிய தீர்வை பெற்று தந்துள்ளார்., குறிப்பாக கெயில்,ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் விவசாய விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்க விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றும் உரிய தீர்வு கண்டு உள்ளார்.
எம்பி கணேசமூர்த்தியின் வாழ்க்கை குறிப்பு
இவரது சொந்த ஊர் சென்னிமலை அருகே குமார வலசு. 10/06/1947 அன்று பிறந்தார்.
பெற்றோர்: அவினாசிக் கவுண்டர்- சாரதாம்பாள்
மனைவி பெயர் சு.பாலாமணி. இறந்துவிட்டார்.
தமிழ்பிரியா என்ற மகளும் கபிலன் என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகிவிட்டது.
கணேச மூர்த்தி சென்னை தியாகராயர் கல்லூரியில் பி.ஏ.வும் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பும் முடித்தார்.
1978 ம் ஆண்டு திமுகவில் மாநில மாணவரணி இணை அமைப்பாளர் ஆனார். 1984 ம் ஆண்டு மாவட்ட தி.மு.க.செயலாளரானார். 1989 ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினரானார்
1993ம் ஆண்டு திமுகவில் இருந்து வைகோவுடன் வெளியேறினார்.
1998ம் ஆண்டு பழனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் ஆனார். 2002ம் ஆண்டு பொடாவில் ஈரோடு வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு 555 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.
2009 மற்றும் 2019 ம் ஆண்டு ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருந்துள்ளார்.
கணேசன் மூர்த்தியின் உடலுக்கு மதிமுக வின் பொதுச் செயலாளர் வைகோ கண்ணீர் விட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை எடுத்து இறுதிச் சடங்கு செய்வதற்காக அவல்பூந்துறை அருகே உள்ள குமாரவலசு பகுதியில் உள்ள எம்பி கணேசன் மூர்த்தியின் தோட்டத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது
அவல்பூந்துறை குமாரவலசில் அவரது இல்லத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ அமைச்சர் முத்துசாமி,வேட்பாளர் பிரகாஷ் ,அதிமுக முன்னாள் அமைச்சர் கேவி ராமலிங்கம் ஆகியோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்