தென்காசி தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் நியமனம்
1 min readTenkasi Constituency Election General Observer Appointment
28/3/2024
தென்காசி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் பொதுப் பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் பொதுப் பார்வையாளராக டோபேஷ்வர் வர்மா, என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பொதுமக்கள் தங்களது தேர்தல் தொடர்பான புகார்கள். கருத்துக்களை 37தென்காசி (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுப் பார்வையாளரை அவரது கைப்பேசி எண் 8383752382 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும். எவரேனும் நேரடியாகத் தேர்தல் பார்வையாளரிடம் புகார் தெரிவிக்க விரும்பினால் குற்றாலம், அரசு விருந்தினர் மாளிகையில் அறை எண்.102ல் தினமும் காலை 10.00 மணி முதல் 1100 மணி வரை தங்களது புகார்களை தெரிவிக்கலாம். தேர்தல் தொடர்பான புகார்களை தென்காசி மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் உள் கட்டணமில்லா தொலைபேசி எண் 1800-425-8375 வாயிலாகத் தெரிவிக்கலாம். அல்லது வாக்காளர் உதவி மைய எண். 1950 என்ற எண்ணிலும், தேர்தல் ஆணையம் வடிவமைத்துள்ள c.VIGIL செயலி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். இராஜபாளையம். ஸ்ரீவில்லிபுத்துார். சங்கரன் கோவில் வாசுதேவநல்லூர். கடையநல்லூர், தென்காசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகன் 37தென்காசி (தனி) நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்
தெரிவித்துள்ளார்.