தென்காசி, விருதுநகர் தொகுதிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்பிரச்சாரம்
1 min readTenkasi, Virudhunagar Constituencies Chief Minister M. K. Stalin
Propaganda
28.3.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதி மற்றும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று ஸ்ரீ வில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உதயசூரியன் மற்றும் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:-
இயற்கை எழில் கொஞ்சும் குற்றாலம் பகுதிக்கு நான் இன்றைக்கு வந்திருக்கிறேன். தென்றல் வீசும் தென்காசிக்கும் வீரத்தின் விலை நிலமான விருதுநகருக்கும் வந்திருக்கிறேன்.
வீரத்தின் அடையாளமான பூலித்தேவரின் மண் இது, மாவீரன் ஒண்டிவீரன் பிறந்த மண் இது, கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் காமராஜர் பிறந்த மண் இது, இப்படிப்பட்ட விடுதலைப் போராட்ட வீரர்கள் பிறந்த மண்ணில் பாசிசத்தை எதிர்த்தும் சர்வாதிகாரத்தில் இருந்து விடுபடவும் நாம் நடத்த இருக்கும் இரண்டாவது விடுதலைப் போராட்டத்தில் வெற்றிக்கு கட்டியம் கூறும் வகையில் இந்த பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று இருக்கும் உங்கள் அனைவருக்கும் வணக்கம்.
இந்தத் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தை தென்மண்டல மாநாடு போல் ஏற்பாடு செய்திருக்கிறார்கள் திராவிட இயக்கத்தின் ஆற்றல் மிகு செயல் வீரர்கள் மருந்து சகோதரர்கள் என என என்னால் அன்போடு அழைக்கப்படும் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் எனது அன்பு சகோதரர் தங்கம் தென்னரசு மற்றும் மாவட்டக் கழக செயலாளர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் ராணி ஸ்ரீகுமார் அரசு மருத்துவராக பணியாற்றியவர். மக்களுக்கு தொண்டாற்ற தன்னுடைய அரசு பணியில் இருந்து விலகி விட்டு தேர்தல் களத்துக்கு வந்திருக்கிறார். அவருக்கு நீங்கள் அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
அதைப்போலவே விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ஏற்கனவே உங்களுக்காக தன்னை ஒப்படைத்துக் கொண்டவர் நாடாளுமன்றத்திலும் தொலைக்காட்சி விவாதங்களிலும் தெளிவாக தன்னுடைய வாதங்களை வைத்து மக்களுக்காக குரல் எழுப்பிக் கொண்டிருப்பவர். எய்ம்ஸ் மருத்துவமனையை 70% கட்டி முடித்து விட்டோம் என்று பாஜக தலைவர் நட்டா கூறிய போது அந்த இடத்திற்கே சென்று தோ எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை கட்டான் தரையாகத்தான் இருக்கிறது என்று பாஜக பொய்யை அம்பலப்படுத்தியவர். நம்முடைய காங்கிரஸ் கட்சியின் வெற்றி வேட்பாளர் மாணிக்தாகூருக்கு கை சின்னத்திலும் வாக்களித்து அவரையும் அமோக வெற்றி பெற செய்ய வேண்டும். என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
திருச்சியில் தொடங்கிய என்னுடைய பயணத்தில் நேற்றோடு பத்து நாடாளுமன்ற தொகுதியை கட்து இருக்கிறேன். இந்த பத்து தொகுதிகளிலும் நான் பயணம் செய்யும்போது மக்களிடம் மாபெரும்ஷ எழுச்சியை பார்க்கிறேன் முக்கியமாக தாய்மார்களின் முகங்களில் மகிழ்ச்சியை பார்க்கிறேன்.
இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் மத்தியில் நடுநிலையாளர்கள் மத்தியில் மகிழ்வோடு பேசப்படுகிற திட்டங்கள் முதலமைச்சர் பெருமை கொள்ளும் பெண்கள் நலத்திட்டங்கள் என்று தனியார் பத்திரிகைகள் தொலைக்காட்சி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டு வருகிறது அதில் முத்தான மூன்று திட்டங்கள் என்று பட்டியலிட்டு உள்ளார்கள்.
முதலில் தாய் வீட்டு சீர் போல எங்கள் அண்ணன் ஸ்டாலின் மாதாமாதம் ரூபாய் ஆயிரம் கொடுக்கிறார் என்று தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் சகோதரிகள் உரிமையுடன் கூறும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம்.
இரண்டாவதாக ஸ்டாலின் சார் பஸ்ல இலவசமாக போகிறோம் என்று இதுவரை 445 கோடி முறை மகளிர் பயணம் மேற்கொள்ளும் விடியல் பயணம் திட்டம் மூன்றாவதாக அரசு பள்ளியில் படித்து கல்லூரிக்கு வந்த எனக்கு அப்பா மாதிரி ஸ்டாலின் அப்பா ஆயிரம் ரூபாய் தருகிறார் என்று கூறும் புதுமைப்பெண் திட்டம்.
இந்த மூன்று திட்டங்கள் மட்டுமல்ல சமீபத்தில் தொடங்கிய நான்காவது திட்டம் ஒன்றும் இருக்கிறது. அப்பா அம்மா குடும்பத்தை பிரிந்து படிப்பிற்காகவும் வேலைக்காகவும் வெளியூரில் தங்கி இருக்கும் என்னுடைய மகள்களுக்காக நான் ஏற்படுத்தி இருக்கும் தோழி விடுதி திட்டம் இவையெல்லாம் பெண்களுக்காக மட்டுமே நம்முடைய அரசு செய்யும் திட்டங்கள் இன்னும் சிறப்பு திட்டங்கள் இருக்கிறது இல்லம் தேடி கல்வி மக்களை தேடி மருத்துவம் நான் முதல்வன் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் முதல்வரின் முகவரி கள ஆய்வில் முதலமைச்சர் நீங்கள் நலமா என்று ஏராளமான முன்னோடி திட்டங்களை உருவாக்கி அதன் மூலமாக கோடிக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் பொற்கால ஆட்சியை நாம் கடத்தி நடத்திக் கொண்டு வருகிறோம்.
அதைப் பலவே
தமிழகத்தில் பல பகுதிகளிலும் உள்ள மக்கள் என்னிடம் ஒரு முக்கியமான கோரிக்கையினை வைத்தார்கள் சீர் மரபினர்களுக்கு டிஎன்சி மற்றும் டிஎன்டி என்று இரண்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறது இது பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்துகிறது என்று என்னிடம் கூறினார்கள் இந்த குழப்பத்தை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்று நான் வாக்குறுதி கொடுத்தேன் அந்த இரட்டை சான்றிதழ் குழப்பத்திற்கு நான் கூறியபடியே முற்றுப்புள்ளி வைத்து விட்டேன். இனி ஒற்றைச் சான்றிதழ் பெற்றால் போதும் என்று உத்தரவிட்டு அரசாணியும் வெளியிடப்பட்டு விட்டது சொன்னதை செய்துவிட்டு தான் உங்கள் முன்னால் வந்து தெம்போடு துணிவோடு நிற்கிறேன் ஒன்றிய மாநில அரசுகளின் அனைத்து சலுகைகளையும் பெறுவதற்கு இந்த ஒற்றைச் சான்றிதழ் வழிவகுக்கும் அதுமட்டுமல்ல பிற்படுத்தப்பட்டோர் சமுதாய மக்களின் நல்லனுக்காக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆதி திராவிட சமுதாய மக்கள் நலனுக்காக சமூக கல்வி முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செய்து கொடுத்தது மட்டுமல்ல செய்யும் அரசும் நாங்கள் தான் செய்ய இருக்கும் அரசும் நம்முடைய திராவிட மாடல் அரசு தான்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கையை சமூக நீதிதான் திராவிட இயக்கம் உருவானதே அனைத்து சமூகங்களுக்கும் அனைத்து உரிமைகளும் கிடைக்க வேண்டும் என்றுதான் இன்றைக்கு தமிழ்நாட்டில் அனைத்து மக்களும் கல்வி வேலை வாய்ப்புகளை பெற்று முன்னேறி இருக்கிறார்கள் என்றால் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நீதிக்கட்சியின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட வகுப்புவாரி உரிமை சட்டம் தன் காரணம் இதை அடுத்தடுத்து வந்த கட்சிகளும் அமல்படுத்தினார்கள்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நலத்திட்டங்கள் தொடர்ந்திடவும் ஒன்றிய அரசின் அனைத்து திட்டங்களும் உங்களை வந்து சேர்ந்திடவும் உங்களது மேலான வாக்குகளை தென்காசி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராணி ஸ்ரீ குமாருக்கு உதயசூரியன் சின்னத்திலும் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மாணிக் தாகூருக்கு கை சின்னத்திலும் வாக்களித்து இருவரையும் சமூக வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக வணிகவரித்துறை அமைச்சர் பி மூர்த்தி தென்காசி பாராளுமன்ற வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் விருதுநகர் பாராளுமன்ற வேட்பாளர் மாணிக்கம் தாகூர் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஈ.ராஜா தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே ஜெயபாலன் திருமங்கலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மணிகண்டன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.