வங்கி வேலையை விடுத்து, திருட்டில் ஈடுபட்ட இளம்பெண் கைது
1 min readA young woman who gave up her bank job and became involved in theft
28.3.2024
உத்தர பிரதேசத்தின் நொய்டா நகரை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்சி அகர்வால் (வயது 29). கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தனியார் வங்கியில் பணியாற்றிய அவர், பின்னர் வேலையை விட்டு விட்டு, பெங்களூரு நகரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளார்.
அப்போது அருகேயுள்ள மற்ற அறைகளில் தங்கியிருப்பவர்கள், ஏதேனும் வேலையாக அல்லது உணவு சாப்பிட வெளியே செல்லும் தருணத்தில் அவர்களின் அறைக்குள் நுழைந்து, லேப்டாப் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை திருடி வந்துள்ளார்.
இதன்பின்பு சொந்த ஊரில் கள்ளச்சந்தையில் அவற்றை நல்ல விலைக்கு விற்றுள்ளார். இதனை தொடர்ந்து மீண்டும் பெங்களூரு திரும்பும் ஜெஸ்சி, மற்றொரு பி.ஜி.யில் வாடகைக்கு அறை எடுத்து தங்குவார்.
பின்னர், லேப்டாப், மொபைல் போன் போன்றவற்றை திருட தொடங்குவார். ஓராண்டுக்கு முன் வங்கி பணியை விட்டு விலகிய அவர், திருட்டு தொழிலில் முழு கவனம் செலுத்த தொடங்கினார். அதில், அவருக்கு நல்ல வருவாய் கிடைக்க தொடங்கியுள்ளது.
இதுபற்றி போலீசாருக்கு புகார் சென்றது. அவர்கள் தொடர்ந்து விசாரணை செய்ததில், ஜெஸ்சி அகர்வால், இந்த திருட்டில் ஈடுபட்ட சம்பவம் தெரிய வந்தது. சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்ததில் மற்றும் பிற விசயங்கள் அடிப்படையில் ஜெஸ்சி கைது செய்யப்பட்டார்.