டாக்டர் கிருஷ்ணசாமி சொத்து விவரம் வெளியீடு
1 min readDr. Krishnasamy Asset Details Release
28.3.2024
தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் அப்போது அவரது பெயரிலும் அவரது மனைவி பெயரிலும் ரூபாய் 25 கோடிக்கு சொத்துக்கள் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ஏ.கே
கமல் கிஷோரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
நேற்று பிற்பகல் 1:30 மணி அளவில் அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் அதிமுக, புதிய தமிழகம், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான கார்களின் ஊர்வலமாக வந்தனர்.
அதன் பிறகு வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வி.எம்.ராஜலெட்சுமி தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான செ.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா, தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான எஸ். செல்வ மோகன்தாஸ் பாண்டியன், ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ.கே.கமல்கிஷோரை சந்தித்து வேட்பு மனு தாக்கல் செய்தனர். அப்போது அந்த வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரம்மாண்ட பத்திரத்தில் தனது சொத்து விபரங்களை குறிப்பிட்டுள்ளார்.
அதில் டாக்டர் கிருஷ்ணசாமியின் பெயரில் ரூபாய் 18 லட்சத்து 12 ஆயிரத்து 783 ரூபாய் மதிப்பில் அசையும் சொத்துக்களும், உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்கலம் கிராமத்தில் ஆறு ஏக்கர் விவசாய நிலம் 17.61 ஏக்கர் நிலங்கள் குனியமுத்தூரில் மருத்துவமனை கட்டிடம் என மொத்தம் 12 கோடியே 99 லட்சத்து 37 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன.
மேலும் அவரது மனைவி டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமி பெயரில் ரூபாய் 47 லட்சத்து 4,957 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் குடிமங்கலம் கிராமத்தில் 5.19 ஏக்கர் நிலம், சென்னை வால்மீகி நகரில் வீடு, கோவை குனியமுத்தூரில் வீடு, மருத்துவமனை, உள்ளிட்ட ரூபாய் 12 கோடியை 9 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான சொத்துக்கள் உள்ளன. கையில் ரொக்கமாக டாக்டர் கிருஷ்ணசாமி இடம் ஒன்னு 21 லட்சமும் அவரது மனைவி டாக்டர் சந்திரிகா கிருஷ்ணசாமியிடம் ஒரு லட்சத்து 2,250 உள்ளது. மனைவியிடம் 618 கிராம் தங்க நகைகள் ரூபாய் 14,63,736 மதிப்பில் உள்ளன. மனைவி பெயரில் மூன்று கோடியே 77 லட்சத்து 60 ஆயிரத்து 750 ரூபாய் வங்கி கடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் டாக்டர் கிருஷ்ணசாமி சட்டமன்ற உறுப்பினருக்கான பென்ஷன், கட்டிடங்கள் வாடகை, வங்கி வட்டி மூலம் அவரது மனைவிக்கு கட்டிட வாடகை, மருத்துவமனை வருமானம், வங்கி வட்டி மூலம், வருமானம் வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
வேப்பமனு தாக்கல் செய்த டாக்டர் கிருஷ்ணசாமி அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது தென்காசி பாராளுமன்ற தொகுதியில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக தெரிவித்தார்.