தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக உட்பட 15 பேர் போட்டி
1 min read15 candidates including DMK, AIADMK and BJP are contesting in Tenkasi constituency
31.3.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் திமுக அதிமுக பாஜக உட்பட 37 பேர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது அதன்படி 15 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
தென்காசி பாராளுமன்ற தொகுதியில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20 ம் தேதி துவங்கியது இதில் திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சி உட்பட மொத்தம் 39 மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்பு மனு பரிசீலனை நேற்று முன்தினம் நடைபெற்றது இதில் 18 அணுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதமுள்ள 19 வேட்பாளர் களின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.அதனைத் தொடர்ந்து வாபஸ் பெற கடைசி நாளான நேற்று சுயேட்சை வேட்பாளர்கள்
கா கிருஷ்ணசாமி, கனகா, ரீகன்குமார், மகாராஜன், ஆகிய நான்கு பேர் தங்களது வேட்டு மனுக்களை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து நேற்று தென்காசி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான ஏ.கே.கமல் கிஷோர் இறுதி வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.அதன்படி திமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமார் உதயசூரியன் சின்னத்திலும், அதிமுக கூட்டணி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமி இரட்டை இலை சின்னத்திலும், பாஜக கூட்டணி வேட்பாளர் ஜான்பாண்டியன் தாமரை சின்னத்திலும், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் மகேஷ் குமார் யானை சின்னத்திலும், வீரோகேவீர் இந்தியா கட்சியின் வேட்பாளர் ராமசாமி கிரிக்கெட் மட்டை சின்னத்திலும், பகுஜன் திராவிட கட்சி சார்பில் சீதா வைரம் சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி இசை மதிவாணன் மைக் சின்னத்திலும், போட்டியிடுகின்றனர்.
இவர்கள் தவிர சுயேட்சை வேட்பாளர்கள் ஆறுமுகசாமி மோதிரம் சின்னத்திலும், ராஜசேகர் கப்பல் சின்னத்திலும், கற்பகவல்லி கரும்பு விவசாயி சின்னத்திலும், பா.கிருஷ்ண சாமி டிவிபெட்டி சின்னத்திலும்,
மு.கிருஷ்ணசாமி கணினி சின்னத்திலும், மன்மதன் மட்டையுடன் கூடிய கிரிக்கெட் வீரர் சின்னத்திலும், முத்தையா வளையல் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். இவ்வாறு தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலக அலுவலருமான ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.