இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டத்தில் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது
1 min readThe cutting of levees in the Ramanadi-Jambunadi link canal project has started
31.3.2024
இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணியில் கால்வாய் வெட்டும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் கடையம் ஊராட்சி ஒன்றிய பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம், கீழப்பாவூர் தெற்கு ஒன்றியம், கடையம் ஒன்றிய பகுதிகளில் நிலவும் வறட்சியை போக்கும் வகையில் இராமநதி அணையின் உபரி நீரை ஜம்புநதி பாசன பகுதிக்கு கொண்டு வரும் இராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் உருவாக்கப்பட்டது.
இதற்காக கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் ரூ.41. 8 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலையில், வனத்துறை அனுமதி பெறவில்லை எனக்கூறி அப்பணியானது நிறுத்தப்பட்டது.
2021ம்ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் மற்றும் இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட அமைப்பாளரும், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளருமான இராம.உதயசூரியன் மற்றும் பல்வேறு தரப்பினர் தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இத்திட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு., பின்னர் மத்திய அரசின் கீழ் இயங்குகிற வன உயிரின பாதுகாப்பு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. அத்துடன் இத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ.21 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
தற்போது மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு பணி தொடங்கியுள்ளது. கடந்த 10 தினங்களாக கால்வாய் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தி னால் பயன்பெறும் அரியப்புரம்,ஆவுடையானூர் ,திப்பணம்பட்டி, வெங்கடாம்பட்டி ,புங்கம்பட்டி, வடமலைப்பட்டி ,வள்ளியம்மாள்புரம், பண்டார குளம், பெத்தநாடார்பட்டி, அடைக்கல பட்டணம், அழகாபுரி, பூலாங்குளம், ஆண்டிபட்டி, கரும்பனூர், ஆலங்குளம், கோவிலூற்று ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் . மீண்டும் பணி தொடங்கிட நடவடிக்கை மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன்,
இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட அமைப்பாளரும், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளருமான இராம.உதயசூரியன் ஆகியோருக்கும்
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.