தென்காசி தொகுதி அதிமுக பொறுப்பாளராக டாக்டர் . அய்யாத்துரை பாண்டியன் நியமனம்
1 min readTenkasi Constituency AIADMK in-charge Dr. Appointment of Ayyathurai Pandian
31.3.2024
தென்காசி பாராளுமன்ற தொகுதி அதிமுக பொறுப்பாளராக டாக்டர் ச.அய்யாத்துரை பாண்டியன் நியமனம் செய்யப்பட்டுள்ள தாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாடாளுமன்ற பொது தேர்தல் வரும் 19.04.2024 அன்று நடைபெற உள்ள நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் அதன் தலைமையிலான கூட்டணி கட்சிகள் சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சில பாராளுமன்ற தொகுதிகளுக்கு கூடுதல் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள்.
அதன்படி தென்காசி பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பணிக்குழுவின் கூடுதல் பொறுப்பாளராக அதிமுக மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர் டாக்டர் ச அய்யாதுரை பாண்டியன் நியமனம் செய்யப்படுகிறார். கழக நிர்வாகிகளும் கழக உடன்பிறப்புகளும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தல் பணிகளை சிறப்பாக செய்திடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.