கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு முதல் அமைச்சர் அஞ்சலி
1 min readGanesh Murthy M.P. First Minister’s tribute to the film
31.3-2024
ஈரோடு பாராளுமன்ற தொகுதி எம்.பி. ஆக இருந்த கணேசமூர்த்தி (77) கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகர் வீட்டில் வைத்து சல்பாஸ் மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி கடந்த 28 ஆம் தேதி கணேசமூர்த்தி எம்.பி. பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த குமாரவலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் எரியூட்டப்பட்டது.
இந்நிலையில் ஈரோடு மாவட்டத்திற்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக வருகை தந்த முதல்- அமைச்சர மு.க.ஸ்டாலின் நேற்று காலை குமாரவலசில் உள்ள கணேசமூர்த்தி எம்.பி. தோட்ட வீட்டிற்கு சென்றார். அங்கு கணேசமூர்த்தி எம்.பி. படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.பின்னர் கணேசமூர்த்தி எம்.பி. மகன் கபிலன், மகள் தமிழ் பிரியா ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். சிறிது நேரம் அங்கிருந்த முதல் – அமைச்சர் பின்னர் மீண்டும் தான் தங்கி இருக்கும் பயணியர் மாளிகைக்கு கிளம்பி சென்றார்.