June 16, 2026

Seithi Saral

Tamil News Channel

துரை தயாநிதியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

1 min read

Chief Minister M. K. Stalin inquired about Durai Dayanidhi

2.4.2024
வேலூர் கோட்டை மைதானத்தில் நேற்று தி.மு.க. பிரமாண்ட பிரசார பொதுக்கூட்டம் நடந்தது . இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.

இதற்காக மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேற்று கார் மூலம் வேலூர் வந்தனர்.

வேலூர் சி.எம்.சி ஆஸ்பத்திரியில் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். முதல்மைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துர்கா ஸ்டாலின் ஆகியோர் சி.எம்.சி. ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

அங்கு துரை தயாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.

முதலமைச்சர் வருகையொட்டி சி.எம்.சி. ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆற்காடு ரோட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *