கடையம் அருகே புகையிலை பதுக்கியவர் கைது – 1 லட்சம் புகையிலை பறிமுதல்
1 min read
A man was arrested for hoarding tobacco near the shop – 1 lakh tobacco seized
9.4.2024
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியில்
சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த நபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 1,05,600 மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தனர்.
ஆழ்வார்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிவன் கோவில் தெருவில் காவல்துறையினர் ரோந்து பணியில் இருந்த போது சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை பதுக்கி வைத்திருந்த பலவேசம் என்பவரது மகன் கள்ளபிரான் (வயது 71) மீது காவல் ஆய்வாளர் மேரி ஜெமிதா வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் 1,05,600 மதிப்பிலான 198 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.