தென்காசி திமுக வேட்பாளர் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி- உதயநிதி நம்பிக்கை
1 min readTenkasi DMK candidate wins by a margin of 3 lakh votes- Udhayanidhi Hope
13.4.2024
தென்காசி தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தென்காசி புதிய பேரூந்து நிலையம் முன்பு தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தலைமையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் செய்யும் போது அவர் பேசியதாவது: தென்காசி தொகுதியில் திமுக வேட்பாளர் டாக்டர் ராணி ஸ்ரீகுமாரை 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும். இந்த தொகுதிக்கு கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மோடி புதிதாக வடை சுட்டு சிலிண்டர் விலையை ரூ.1200 உயர்த்தியுள்ளார். கொரோனா காலத்தில் 6 மாதங்களாக பொதுமக்களை சிறையில் வைத்தவர் பிரதமர் மோடி.
சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி யுள்ளார். மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. மகளிருக்கு நகர பேரூந்துகளில் இலவச பயணம் செயல்படுத்தப் பட்டுள்ளது. மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் திராவிட மாடல் அரசு என்றார்.
மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கவில்லை என கூடியிருந்த பெண்கள் கூறினர். அதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் உரிமைத்தொகைக்கு 1.60 கோடி பேர் விண்ணப்பித்ததில் 1.18 கோடி பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. மீதி உள்ள தகுதி வாய்ந்த பெண்களுக்கு விரைவில் வழங்கப்படும். தங்கம் விலை ஏற்றியது ஒன்றிய அரசு. தமிழக அரசு ஏற்றவில்லை. மோடி தேர்தலின் போது மட்டும் வருவார். வெள்ளத்தின் போது அவர் தமிழகத்திற்கு வரவில்லை. வெள்ள நிவாரண நிதி கொடுக்கவில்லை.
இந்தியா கூட்டணியை வெற்றி பெறச் செய்யுங்கள். முதல்வர் ஸ்டாலின் கைகாட்டும் நபர் பிரதமராக வருவார். அப்போது தமிழகத்திற்கு அதிகமான நிதியை முதல்வர் பெற்றுத் தருவார்.
இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ் பழனி நாடார், மதிமுக மாவட்டச் செயலாளர்கள் இராம உதயசூரியன், சுதா பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட திமுக தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.