May 21, 2024

Seithi Saral

Tamil News Channel

கடையம் மாலிக்நகரில் இலவச பொது மருத்துவ முகாம்

1 min read

Free public medical camp at Khadayam Maliknagar

30.4.2024
தென்காசி மாவட்டம் கடையம் ஊராட்சி ஒன்றியம் மாலிக் நகரில் திமுக சார்பில் நடைபெற்ற இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாமினை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் தொடங்கி வைத்தார்.

கடையம் தெற்கு ஒன்றியம்,வீரா சமுத்திரம் ஊராட்சி மாலிக் நகரில் தென்காசி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், திருநெல்வேலி டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனை, கண் மருத்துவ கல்வி நிறுவனம், மாலிக் நகர் திமுக, தென்காசி சாந்தி பன்நோக்கு மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் கண் சிகிச்சை முகாம் மாலிக் நகர் ஹிலால் துவக்கப்பள்ளியில் நடைபெற்றது.
வீரா சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜீனத் பர்வீன் யாகூப் தலைமை வகித்தார்.

முதலியார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மைதீன் பீவி ஹசன், தெற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் வின்சென்ட், வடக்கு ஒன்றிய பொருளாளர் அகமது அஜித், மாலிக் நகர் செயலாளர் முகமது ஈசாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் ஆதம் சுபேர் வரவேற்றார்.

முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மருத்துவ முகாமினை தொடங்கி வைத்து பேசினார். இதில் தலைமை பொதுக்குழு உறுப்பினரும், சேர்வைக்காரன் பட்டி ஊராட்சி மன்ற தலைவருமான ரவிச்சந்திரன், ஐக்கிய ஜமாத் பொருளாளர் செய்யது அபுதாஹிர், ஜமாத் ஆலோசகர் அலியப்பா, கடையம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் கே.பி. என். சேட், மாவட்ட கவுன்சிலர் மைதீன் பீவி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கருணாநிதி, மாவட்ட ஓட்டுனர் அணி துணை அமைப்பாளர் மேசியா ஜெய் சிங்ஈ ஒன்றிய கவுன்சிலர் சங்கர், முருகேசன், சுந்தரி மாரியப்பன், பேரூராட்சி கவுன்சிலர்கள் சக்தி சுப்பிரமணியன், சந்திரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி மக்தும், முஸ்லிம் லீக் அப்துல் காதர், காங்கிரஸ் பிரமுகர் கண்ணன் நவநீதகிருஷ்ணன்,
ஆலங்குளம் ஒன்றிய துணை சேர்மன் செல்வகொ டி ராஜா மணி, மாவட்ட பிரதிநிதி பெருமாள், சுல்தான், ஆரிப், பிச்சாண்டி, செம்மாத்தி, சுல்தான், ஆட்டோ சங்கத் தலைவர் திருமலை குமார், காளி ஆட்டோ ஐயப்பன், சுல்தான், இனாயத், ஆழ்வை மைதீன், காசியார், முதலியார்பட்டி கிளை நிர்வாகிகள் மைதீன்,ஜமீன், அஸ்லீம், ஹக்கீம், சதாம், சேக் சலீம், நிஜாம், ஹாஜி இம்ரான், ஆஜிஸ், ஏ.பி.என். குணா, ஐந்தாம் கட்டளை சுரேஷ், இளைஞர் அணி அசோக்,நவீன்கிருஷ்ணா, அருணா பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த இலவச மருத்துவ முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பொது மருத்துவ மற்றும் கண் சிகிச்சை பெற்றுக் கொண்டனர். முடிவில் மாவட்ட பிரதிநிதி முகம்மது யாக்கூப் அனைவருக்கும் நன்றி கூறினார்.

About Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.